உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#26 சங்ககாலச் சான்ருேர்கள்

பாடல்களே ஊன்றிக் கற்பார் உள்ளத்திற்கு எளிதில் புலனுகும். ஒன்னர் காட்டில் துயரமே வடிவு கொண்டாற் போலக் கலங்கிக் கிடந்த நீர்த்துறைகள்-அழிந்துகிடக்கும் நிலங்கள்-வெட்டுண்டு கிடக்கும் காவல் மரங்கள்-மனே வாழ்வு சிதையத் தியால் பாழ்பட்ட வீடுகள்-இவற்றை யெல்லாம் தம் பாட்டில் சித்திரித்துக் காட்டிய கல்லாடனுர், இறுதியில், அரசே, யான் வந்த வழியில் இன்னுெரு துயரக்காட்சியும் கண்டேன்; கொம்பொடிந்த பெரிய கலேமான் ஒன்று புலியாற்பற்றப்பட்டது கண்ட அதன் பெண்மான், தன் சிறிய குட்டிகளே அனைத்துக்கொண்டு பூளேச்செடி நிறைந்த ஆளற்ற அஞ்சத்தக்க பாழிடங் களில் வேளைப் பூவைக் கடித்துக்கொண்டிருந்த துன்பக் காட்சியே அதுவாகும், என்று உரைத்து அது வாயிலாக அவன் வெஞ்சினத்திற்கு இரையாகிப் பகைவர் இறங் தமையால் அவர் பெண்டிர் தம் இளம்புதல்வரைக் காத் தற்பொருட்டு அடகு தின்று உயிர் வாழும் நிலையை கினேந்து மனம் கனிந்து இளகும் வண்ணம் கருத்தமைந்த பாடலேப் பாடினர். மாங்குடி மருதனரோ, இன்னும் ஒரு படி மேற்சென்று, வெற்றி புகழ் இவற்றின் கிலேயா மையையெல்லாம் உணர்ந்து, அவன் இனிது ஒழுகி உய்யுமாறு காஞ்சித்திணே அமைந்த அழகிய பாடலைப் பாடலானுர்:

இரவன் மாக்கள் ஈகை துவல் ஒண்டொடி மகளிர் பொலங்கலத்(து) ஏந்திய தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்(து) ஆங்கினி(து) ஒழுகுமதி பெரும! ஆங்(கு)அது வல்லுநர் வாழ்ந்தோர் என்ப; தொல்லிசை மலர்தலை உலகத்துத் தோன்றிப் பலர்செலச் செல்லாது நின்றுவிளித் தோரே. (புறம் 24) மாங்குடி மருதரிைன் அறவுரைகளே நெடுஞ்செழியன்