உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் நெடுஞ்செழியன் #27

செவி மடுத்தான் ; மகிழ்ந்தான். எனினும், ஊழித்திப் போல அவன் உள்ளத்தில் எரிந்துகொண்டிருந்த சினத் தி முற்றிலும் அவிந்தது எனக்கூறமுடியவில்லை. கனன்று கொண்டே இருந்த அந்நெருப்பு எழுகா விட்டு எரியும் வாய்ப்புக்கள் அவனேத் தேடி அடுத்தடுத்து வந்த வண் ண்ம் இருந்தன. மாங்குடி மருதனுர் போன்ற சான்ருேர் கள் அவன் செவிப்புலத்தில் வித்திய சொற்கள் விதை களாகவே கிடந்தன. அவன் உள்ளமும் தணியவில்லே. அவன் ஒன்னர் பகையும் ஒழியவில்லே. அவன் மீண்டும் பல போர்கள் புரிந்தான். எல்லாவற்றினும் கடுமையான போர் ஒன்றும் அவன் ஆற்ற நேர்ந்தது.

நெடுஞ்செழியனே எதிர்த்து அவன் பழம்பகைவர் களின் கால்வழியில் தோன்றியவர் கிளம்பினர். ஆலங் கானப் போரில் தம் முன்னேர் பாண்டியன் வாளுக்கு இரையான செய்தி அவர்கள் மான உணர்ச்சிக்கு ஒர் அறைகூவலாய் இருந்தது. அதன் விளைவாகச் சேரநாட் டிலும் சோழநாட்டிலும் படை திரண்டது. வேளிர் குடி யைச் சார்ந்த குறுகில மன்னர்களும் ப ண டு பே ல ப் போருக்கு ஆவன புரிந்தார்கள். அவர்களுள் முதன்மை யானவர் இருவர். சோழ நாட்டில் அவர்கள் ஆட்சிபுரிந்த பகுதிகள் மிழலைக் கூற்றமும் முத்துாற்றுக் கூற்றமும் ஆகும். இவ்விரு சிறு நாடுகளுள் ஒன்ருகிய மிழலைக் கூற்றத்தை ஆண்டவன் சிறந்த கொடை வள்ளலாகிய வேள் எவ்வி என்பான். முத்து ற்றுக் கூற்றத்தை நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழித் தோன்றிய காற் பத்தொன்பது வேளிருள் ஒரு குடி வழி வந்த வேளிர் தலைவன் ஆண்டு வந்தான். இவ்விருவரும் தம் முன்னவர் ஐவரை அழித்த பாண்டியனே எதிர்த்து வென்று குடிப்பழி துடைக்கத் துடித்தனர். இவர்கள் துணேயை யும் பயன்படுத்திக்கொண்டு கோச்சேரமான் யானேக்கட்