உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 சங்ககாலச் சான்ருேர்கள்

யாவும் அவர்கள் நாவிலும் கெஞ்சிலும் களிகடம் புரிந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசவைக்கண் இருந்த செழியன், சேரன் விடுத்த ஒலை கண்டதும் சிவந்த கண்ணனுய்ச் சீறி எழுந்த காட்சியையும், கேட்டவர் மெய் சிலிர்க்க அவன் கூறிய வஞ்சினத்தையும் அடிக்கடி கினேத்துக்கொண்டார்கள். அவர்கள் உள்ளம் பாகாய் உருகியது. இவனல்லனே மன் ன ை! இவன்கீழ் வாழும் பே அறு பெற்ற நாமல்லமோ குடிகள் ' என்று உள்ளி உள்ளி உவந்தார்கள்,

நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் *இளையன் இவன்’என உ?ளயக் கூறிப் படுமணி விரட்டும் பாவடி பணத்தாள் தெடுதல் யானையும் தேரும் மாவும் படையமை மறவரும் உடையம் யாம்'ஏன்(று) உறுதுப்(பு) அஞ்சா(து) உடல்சினம் செருக்கிச் சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை, அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொ(டு) ஒருங்(கு)அகப் படேஎன் ஆயின், பொருந்திய என்நிழல் வாழ்நர் செல்திழல் காணுது ' கொடியனெம் இறை'யெனக் கண்ணிர் பரப்பிக் குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக! ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தல்ைவ னுக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரைகஎன் நிலவரை! புரப்போர் புன்கண் கூர இரப்போர்க்(கு) ஈயர் இன்மையான் உறவே ! (புறம். 72) என்று செழியன் கூறிய வஞ்சின மொழிகளே-இலக்கிய மாய் உருப்பெற்று விளங்கும் உணர்ச்சி ததும்பும் பாடல்