உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் நெடுஞ்செழியன் 137

பேர். மக்கட்குரிய நன்மன உணர்வு அற்ற அவர் யாவ ரும் வறிதே மாண்டு ஒழிந்தனர். அவ்வாறு சென்ற காலத்தில் இறந்தவர் கடலலையால் தரையில் சேர்க்கப் படும் மணலினும் மிகப் பலர் ஆவர்.'

பணேகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர் கரைபொரு(து) இரங்கும் கனவிரு முந்நீர்த் திரையிடு மணலிலும் பலரே உரைசெல. மலர்தலை உலகம் ஆண்டுகழித் தோரே.'

(மதுரைக்காஞ்சி, அடி, 234-237) இவ்வாறு செந்தமிழ்ச் சான்ருேர் கூறிய நிறைமொழி கேட்டான் நெடுஞ்செழியன் ; கிலேயாமை உணர்ந்தான் ; போர் வெறி ங்ேகினன்; புத்துணர்வு பெற்ருன்; விருப்பும் வெறுப்பும் அற்ற-உயர்வும் தாழ்வும் ஒழிந்த-இகழும் புகழும் கடந்த புது வாழ்வு-இன்ப வாழ்வு-கண்டான் ; எவ்வுயிரும் தன் உயிரெனப் போற்றும் இதயம் பெற்ருன்; இறவாத பெரும்புகழ் எய்தின்ை. இருள் நீங்கி இன்பம் பயக்கும் அருளாளய்ை-பொய்யில் காட்சிப் புலவய்ைஅந்தமில் இன்பத்து அரசாள் வேந்தனய் விளங்கினன் பாண்டியன் நெடுஞ்செழியன். உலகை வெல்லும் போரில் அவன் அரசியல் வாழ்வு தொடங்கியது. ஆளுல், உள்ளத்தை வெல்லும் போரில் அவன் அருள் வாழ்வு முடிந்தது. உலகை வென்ற அவன் வரலாறும், அதனி ஆணும் பெரிதாய உள் ள க் ைத வென்று விழுப்புகழ் கொண்ட அவன் பெருமையும், காலமும் கன்னித் தமிழும் உள்ள வரை கின்று நிலவும்.