உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. கணியன் பூங்குன்றனர்

"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம் முழுதையும் அரியணே ஏறித் திருமுடி சூடிச் செங்கோல் ஏந்தித் தமிழன்னே ஆட்சி புரிந்த சங்ககாலம் தமிழ் மக்களின் பொற்காலம். மக்கள் வாழ்வில் அழகும் அறிவும் அன்பும் அறனும் இன்பமும் ஒளியும் கை கோத்து எங்கணும் களிநடம் புரிந்து விளங்கிய அங் காளில் கம் அன்னேயின்-தமிழரசியின் திருவோலகத்தை ஐந்நூற்றுவர்க்கும் மேற்பட்ட அருந்தமிழ்ப் புலவர் அணி செய்தனர். அப்புலவர் தொகையுள் ஆடவரும் மகளிரும் உழவரும் தொழிலாளரும் வணிகரும் வீரரும் அரசரும் அந்தணரும் என எண்ணற்ற பல் பிரிவினரும் கலந்து விளங்கினர்; செந்தமிழ் மொழியையும் இலக்கியத் தையும் சங்கம் நிறுவிச் சீர்மையுற ஆய்ந்து போற்றி, அருமையுடன் வளர்த்தனர். அவ்வாறு தமிழன்னேயின் திருவடி பரவி வந்த சான்ருேர் பலரும் உறுப்பு-தொழில்பாட்டு-மரபு-வழக்க ஒழு க் கம் முதலான பல்வேறு காரணங்களால் பெயர் பெற்று விளங்கினர். சங்க இலக் கியப் பதிப்பொன்று காற்பத்து நான்கு வகையாக அக் காலப் புலவர் பெயரை வகைப்படுத்திக் காட்டுகின்றது. அவருள் தொழிலால் பெயர் பெற்றவராகச் சற்றேறக் குறைய காற்பத்தாறு யு ல வ ர் காணப்படுகின்றனர். அவர்கள் பெயரை ஆராய்ந்து பார்க்குங்கால் அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல் பல்விதமாய தொழில் புரிந்தோரும் அந்தநாளில் தமிழிலக்கிய வளர்ச்சியில் ஈடு பட்டிருந்த சிறப்பு நமக்கு இனிது புலகுைம். சான்ருகச் சிலர் பெயரைச் சுட்டிக் காட்டலாம்: அவர் ஆசிரியன்