உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணியன் பூங்குன்றனுர் #33

பெருங்கண்ணன், உறையூர் இளம்பொன் வாணிகனுர், உறையூர் மருத்துவன் தாமோதரனுர், தங்கால் பொற் கொல்லன் வெண்ணுகர்ை, மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனர், மதுரைக் கொல்லன் வெண்ணுகனுர், மதுரைக் கூத்தனர், வினேத்தொழில் சோரேனுர் என்ப வர் ஆ. வர். இவருள்ளும் சில ர் தொழிலால்மட்டும் அன்றி இடம் தொழில் இரண்டாலும் பெயர் பெற்றி குத் தலேயும் காணலாம்.

அவ்வாறு பெயர் பெற்ருருள் ஒருவரே கணியன் பூங் குன்றனராவார். கணியன் என்று அவர் பெற்றுள்ள அடைமொழியை விளவெல்லாம் கண்ணி உரைப்பசன் கணி’ என்ற புறப்பொருள் வெண்பாமாலே அடியைத் துணையாகக் கொண்டு எண்ணிப் பார்க்குமிடத்து, அவர் காலத்தின் இயலை எல்லாம் கணித்துரைக்க வல்ல கூர்மதியாளராய் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிதின் புலகுைம். அவர் பிறந்த ஊர் பூங்குன்ற மாகும். பூங்குன்றம் என்பது காடொன்றின் தலை நகர். இராமநாதபுர மாவட்டத்தில் மகிபாலன் பட்டி என்ற ஓர் ஊர் உளது. சாசனங்கள் அவ்வூரைப் பூ, ங் கு ன் ற நாட்டுப் பூங்குன்றம்’ எனக் குறிக்கின்றன. அதனுல், மகிபாலன் பட்டியே பழைய பூங்குன்றம்" எனத் துணிய லாம். ஏசார்ந்த பேரும் இயற்கை வளனும் படைத்த அவ்வூரின்கண் தோன்றிய அத்தமிழ்ச் சான்ருேசின் வாழ்வு, முகில் கூட்டம் ஏதும் படியாத முழுதும் வெள் ளிய தூய வானம் போன்ற காட்சியை வழங்குகின்றது. உணர்ச்சியின் அலைப்புக்கும், கிகழ்ச்சிகளின் மோதல் களுக்கும் இரையாகாது வாழ்ந்த அச்சான்ருேளின் உள் ளம், கள்ளமற்ற குழந்தையின் உள்ளம் போன்ற தூய்மை யும், துவரத் துறந்த ஞானியின் தெளிவும் ஒருங்கே নিল ষ্টি । 2. காலடியார், 128, 212.