உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* {{} சங்ககாலச் சான்ருேர்கள்

சாயும், கற்ருேர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையராயும்' விளங்கிய பூங்குன்றனரது அருள் ததும்பும் உள்ளத்து உணர்வினின்றும் பொள்ளெனப் பொங்கிப் பிறந்த இரு பாடல்கள் சங்கத்தமிழ் வானில் மாலே மதியமும் காலேக் கதிரவனும் போல ஒளி பரப்பி அணி செய்கின்றன. அவற்றுள் ஒன்று, அகப்பொருள் அமைதி நிறைந்து உள்ளத்தையும் உணர்வையும் உ ரு க் கும் ஒண்மை பெற்று ஒளிரும் நற்றினப் பாடல்; மற்றென்று, புறப் பொருட்டயன் பொதிந்து உள்ளத்தை உணர்வைத் தெளிவிக்கும் பண்பு பெற்றுப் பொலியும் புறநானூற்றுப் பாடல். இவ்விரு பாடல்களுள்ளும் அறிவும் உணர்வும் கலந்த அறவாழ்வு வாழ்ந்த பூங்குன்றனர் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனத் தொடங்கிப் பாடியுள்ள அரிய பாடல், உலகிற்கு ஓங்கிய ஒரு மாமணியாய்த் தமிழிலக் கியம் பெற்ற திருமாமணியாய் மிளிர்கின்றது.

சான்ருே.ர்களின் வாழ்வைக் கற்றல் இனிது ; கேட் டல் அதனினும் இனிது. அவர் வாழ்வை மனமாரப் போற்றல் எளிது; வாயால் புகழல் அதனினும் எளிது. ஆல்ை, அவர் வாழ்வை அடியொற்றி வைத்து வாழ் வாங்கு வாழ்வதேச அரிது; மிக அரிது! அரிதாயினும், அத்துறையில்-வாழ்வுத் துறையில்-வெற்றி காணல் அன்ருே சிறப்பு : அச்சிறப்பினே எய்தற்குரிய செந்நெறி யாது? அதை விளக்குவதே பூங்குன்றனரின் அரிய பாட்டு.

'சான்ருண்மை’ என்றே தனி ஒர் அதிகாரம் வகுத்து உலகுய்ய வழி காட்டிய செங்காப்போதாரும்,

குணநலம் சான்ருேர் நலனே ; பிறநலம் எந்தலத்(து) உள்ளது உம் அன்று .' (குறள், 983) என்று தெள்ளத்தெளியக் கூறிப் போந்தார். அவ்வாறு