உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணியன் பூங்குன்றனுர் 141

அவர் போற்றிய குணநலனுக்கெல்லாம் உயிராய் விளங் கும் ஒப்பற்ற பண்பே நடுவுநிலைமை'யாகும். இவ்வுண் மையையும் வள்ளுவப் பெருந்தகையாரே விளக்குகின்ருர்,

கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக்

கோடாமை சான்ருேர்க் கணி.’ (குறள், 1.15) சமன்செய்து சீர்துக்கும் கோல்போல் அமைந்(து) ஒருபால் கோடாமை சான்ருேர்க் கணி.' (குறள், 118)

என்னும் இம்மணி மொழிகள் வள்ளுவர் உள்ளத்தைநடுவு கிலேமையின் சிறப்பை-நன்கு புலப்படுத்துகின்றன. அல்லவோ? இக்கருத்தமிழ்தில் ஊறிய கவியரசர் பாரதி யாரும்,

' ஞாயிற்றை யெண்ணி யென்றும்

நடுமை நிலையின்று ஆயிர மாண்டுலகில் கிளியே!

அழிவின்றி வாழ்வோமடி!"

என்று கவிதை நலம் சொட்டச் சொட்டப் பாடுகின் ருர். வள்ளுவர் முதல் பாரதியார் வரை சான்ருே சனவரும் போற்றும் இந்நடுவு கிலேமை, வாழ்க்கையின் எல்லாத் துறைகட்கும் வேண்டும். எத்துறையிலும், எ க் கிலே யிலும் எள்ளளவும் இந்நடுவு கிலேமை பிறழுமானல், அத் துறை பாழ்பட்டுக் கெட்டொழிதல் உறுதி. எனவே, தமிழ்ப்பெருஞ்சான்றேராகிய பூங்குன்றனர். தனி ஒருவ னது வாழ்க்கைக்கும் பொது வாழ்க்கைக்கும் இன்றியமை யாத நடுவுநிலைமையின் அருமையையும் பெருமையையும் அழகுற விளக்குகிருர் :

யாதும் ஊரே யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

நேர்தலும் தணிதலும் அவற்ருே ரன்ன; சாதலும் புதுவ(து) அன்றே; வாழ்தல்