உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

褒螺2 சங்ககாலச் சான்றேர்கள்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின் இன்னு(து) என்றலும் இலமே, மின்னுெடு வானம் தண்துளி தலைஇ ஆனுது கல்பொரு(து) இரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்; ஆகலின், மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம். 192)

முதல் நூற்ருண்டில் இருந்த உலகத்தை நோக்க இருபதாம் நூற்ருண்டிலுள்ள இன்றைய மனிதனது புற நாகரிகம் எவ்வளவோ வளர்ச்சி பெற்றுவிட்டது. ஆல்ை, அதற்கு இணையாக அவன் அக நாகரிகம் - உள் ளத்தின் பண்பாடு-வளரவில்லே-சிறப்புறவில்லை என்றே கூற வேண்டும். இல்லேயேல், ஆயிரக் கணக்கான மைல் களேச் சில மணி நேரத்தில் விண்வழியே பறந்து கடக்கக் கற்றவன்-ஆழ்கடலினிடையே நீர் மூழ்கிக் கப்பல்களின் துணேக்கொண்டு நெடுநேரமிருக்கக் கற்றவன்-விண் முட்டும் வெண்மாளிகைகளே அடுக்கடுக்காய்க் கட்டக் கற்றவன்-விண்ணின் இயல்பை, மண்ணின் பண்பை யெல்லாம் துருவியறியக் கற்றவன்-திராத உடல் நோய் களேயெல்லாம் தீர்த்துவைக்கும் அருமருந்துகளைப் பாடு பட்டுக் கண்டவன்-பல்லாயிர மைல்களுக்கு அப்பா லிருந்து பாடும் குரலையும் ஆடும் காட்சியையும் காணக் கருவிகள் அமைத்தவன்-சுருங்கச் சொன்னல், இடத்தை யும், காலத்தையும், இயற்கையையும் எத்தனையோ வகை களால் வெல்லக் கற்றவன்-கள்ளமற்ற குழந்தைகள் கலே பயிலும் கூடம் என்றும், கூழுக்கலையும் திக்கற்ற ஏழையர் வாழும் பகுதி என்றும், நோயுற்று நலிந்தவர் வதியும் கிலேயம் என்றும் சிறிதும் கண்ளுேடாது நீக்