உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணியன் பூங்குன்றனுக் # 47

தன்றே, என்று ஆன்றவிந்தடங்கிய உள்ளத்தின் அருமை தோன்றக் கூறுகிரு.ர். பூங்குன்றஞர் காட்டிய வழியில் சாவைக் கண்டும் அஞ்சாத உள்ளத்திற்குதீதும் கன்றும் பிறர்தர வாரா ; நோதலும் தணிதலும் அவற்ருே ரன்ன, என்ற உண்மையினே வாழ்க்கையில் காட்டும் வன்மை பெற்ற கெஞ்சிற்கு-நடுவுகிலே தானுக வந்தமையும். அதுபோழ்து வாழ்வு இனிது என மயங் கும் மயக்கமும், இன்னுது என வெறுக்கும் வெறுப்பும் இல்லாது போகும். இ ைத .ே ய சான்குேராகிய பூங் குன்றனர்,

  • வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே ; முனிவின்

இன்னு(து) என்றலும் இலமே.' என்று தாம் உணர்ந்த உணர்வின் ஆழமெல்லாம் புலனு கக் கூறுகின்ருர். இத்தகைய ஆழ்ந்த உணர்வினே அடிப்படையாகக்கொண்ட ல் லு ள் ள ம் உணர்ந்து தெளியவல்ல ஒர் அரிய உண்மையை அடுத்து விளக்கு கின்ருர் பூங்குன்றனர்.

விண்ணேயும், மண்னேயும், உலக வாழ்க்கையையும் தன் அற ஆட்சியினின்றும் ஒரு சிறிதும் பிறழாதவாறு இயக்குகின்றது உயிர் வாழ்வின் முறை என்ற ஒன்று. அம்முறை சிலர்க்கு இயற்கையாகவும் மற்றும் பலர்க் குக் கடவுளாகவும் காட்சி வழங்குகிறது. ஒருருவம் ஒரு நாமம் இல்லாத அம்முறை"க்கு உலகம் ஆயிரம் உருவங்கள் கற்பித்து, ஆயிரம் நாமங்கள் சூட்டி வழிபடு கின்றது. உலகின் போக்கு எவ்வாருயினும், உயிர் வாழ் விற்கு அடிப்படையாய் விளங்கும் அம்முறை என்ற ஒன்று-ஒங்கி ஆழ்ந்து அகன்று துண்ணியதாய் விளங் கும் அப்பேராற்றல்-மறுக்கவோ மறைக்கவோ புறக் கணிக்கவோ முடியாத தன்மையதாய்த் திகழ்கின்றது.