உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 சங்ககாலச் சான்ருேர்கள்

இத்தகைய ஆற்றலை உணர்த்தக் கலேயுரைத்த கற்பனே கள் எண்ணில. அறவோர்கள் கண்ட சமயங்களும் மிகப் பல. பல வாய் விளங்கும் இவற்றின் அடிப்படை ஒரு மையை-உண்மையைக்-காண உலகால் இயலவில்லை. அதற்கு மாருகக் கல்லில் விளங்கும் கலையை-கருத்தைமறந்து, கல்லேயே போற்றத் தலைப்பட்டது; கலைஞனது உள்ளத்தைப் போற்ற மறந்து, அவன் உருவையும் சிலே செய்த உளியையும் தொழத் தொடங்கியது. இத்தகைய உலகின் போக்கு இன்றும் மாறியபாடில்லே. அறவோரின் கொள்கையைக்-குறிக்கோளே-மறந்து, சமயம் என்ற பெயரால் அவர் சித்திரத்தைச்-சிலேயைப்-போற்றத் தலைப்பட்டனர் மக்கள். வாழ்விற்குப் பயன்பட வேண்டிய ‘சமயம் வெறுஞ்சடங்காயிற்று. அம்மட்டோடும் கின்ற தோ? இக்கல்லினும் அக்கல்லே சிறந்தது, என்றும், இக் கலைஞரிலும் அக்கலைஞரே உயர்ந்தவர்,” என்றும், இச் சமயத்தினும் அச்சமயமே உயர்ந்தது, என்றும், அவ் வறவோரினும் இவரே பெரியவர், என்றும் பிதற்றவும் தொடங்கியது; அவ்வாறு புகழ்தலோடும் அமையாது, இவர் பெரியவர்; அதனல், அவர் மிக இழிந்தவர்,” எனக் கூசாது கூறவும் முனேந்தது. உண்மை எங்கோ ஒடி மறைந்தது. இவ்வாறு ஒருவர் புகழ்ச்சியும் மற்றவர் இகழ்ச்சியும் பகைக்கும் பூசலுக்கும் வித்திட்டன. பகை யும் பூசலும் இகலாய்ப்-போராய்-மூண்டன. இவ்வுல கியலேக் கூர்ந்து கண்டார் பூங்குன்றனர். எனவே,

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.’ (குறள், 948) மேற்கொள்ளும் நன்மருத்துவர் போல உலகின் பெரு நோய்க்கு மருந்தளிக்கின் ருர். r

பொருள் துறையில் பெரிய ஏற்றத் தாழ்வுகள் இருப்பது எவ்வளவு தீமையானது என்பதை-எரிமலை