உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககாலச் சான்ருேர்கள்

கோளேயும் கைநழுவவிடத் துணிகின் ருர்கள்? அவ்வாறே சமயத் துறையிலும் தனி ஒருவர்தம் புகழே எங்கும் மணக்க வேண்டும் என்ற எண்ணத்தாலன் ருே அச்சம யத்தின் உயர்நெறிகளெல்லாம் அதன் பாதுகாவலர்' களாலேயே புறக்கணிக்கப்படுகின்றன? இவ்வளவு தீமை கட்கும் வித்தாயிருப்பது புகழ் கசை. இப்புகழ்ப் பற்று நீங்கவேண்டுமாயின், வாழ்வின் உண்மையில் தெளிவு வேண்டும். அத்தெளிவு பெறும் ஆற்றலினே எளிய வகையில் அறிவிக்கின்ருர் பூங்குன்றனர்; வெள்ளப் பெருக்கெடுக்கும் பேரியாற்றின் நீரில் பட்ட புனேயினே நமக்குக் காட்டுகின்ருர். அப்புணே எவ்வாறு அந்நீர் வழியே செல்கின்றதோ, அவ்வாறே ஆருயிரும் அனேத் தினும் வல்லதாய் விளங்கும் முறை வழியாகவே செல் லும் நீர்மை படைத்தது. இவ்வுண்மையினே உணர உணர மனித உள்ளம் அம்முறையின் ஆற்றலை எண்ணி வியப்பதில் ஈடுபடுமேயன்றி, இவர் பெரியர் எனப் புகழ் வதும், அதனினும் பெருந்தவறு உடைத்தாக அவர் சிறியர்' என்று இகழ்வதுமான புன்னெறியில் ஒருநாளும் படியாது. புன்னெறிப் புகாது நன்றின்பால் படிந்து மனிதகுலம் உய்ய இது ஒன்றே வழி. இதனேப் பின் வரும் அடிகளால் புலப்படுத்துகிருர் புலவர்: நீர்வழிப் படுஉம் புனேபோல் ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்; ஆகலின், மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே ; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம், 193) தனி மனிதனது ஆற்றலையும் புகழையும்விட எல் லோரையும் எல்லாவற்றையும் இயக்கும் இனேயில்லாப் பேராற்றலின் உயர்வே-மாட்சியே-காம் அறிந்தும் - உணர்ந்தும் - போற்றியும் - வாழ்வதற்குரியது எ ன் ற