பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் 24

பொருத்தமும் பயனும் உடையது ஆகும்.

தாயுமானவர் உள்ள முருகிக்கூறியதுபோல, கூர்த்த அறிவெல்லாம் கொள்ளே கொடுத்து ஆருயிர்கள்பால் அன்பு காட்டி அழியாப் புக ழ் பெற்ருேருள் ஒருவன் அல்லனே செங்காப் புலவர் பாடும் புகழ்படைத்த கடாஅ யானேக் கலிமான் பேகன் மயில் ஆடி அகவியதைக் கேட்டுக் குளிரால் நடுங்கிக் கூவியதாக உணர்ந்து தன் போர்வையை அதற்கு ஈந்த அருள் வள்ளல் அல்லனே பேகன் ? இவ்வாறு கான மஞ்ஞைக்கும் கலிங்கம் நல்கிய அவ்வாவியர் பெருமகனது-பெருங்கல் நாடன து-கருனே வாழ்விற்கே களங்கமாக, அவன் வாழ்வில் எவ்வாருே புகுந்துவிட்டது ஒரு குறை. தோகை விரித்து ஆடும் மயிலுக்கு அ ரு ஸ் செய் த அ வ ன் , த ன் கற்பின் கொழுந்தாய் விளங்கிய வாழ்க்கைத் துனேவியைமனேக்கு விளக்காகிய வானுதலே-கண்ணகியைக் கை விடத் துணிந்தான். கைவண்மை மிக்க பேகன் தன் மனேவியிடம் கொண்ட மாறுபாடு, நாளடைவில் புலவர் நெஞ்சையெல்லாம் புண்படுத்தி, கலைஞர்உள்ளத்தையெல் லாம் கலக்கி, இரங்க வைக்கும் அளவிற்குப் பெரியதாய் வி ட் டது. இங்கிலேயில் தமிழ்ச்சான்ருேர் பல ரு ம் அவன்பால் சென்று அறிவுரை கூற முற்பட்டனர். அச்சான்ருேருள் ஒருவராய்க் கபிலரும் விளங்கினர். துன்பத்தின் சிறு கிழலும் மன்னுயிர்கள்மீது படிதல் ஆகாது என்ற அருள் நெஞ்சம் படைத்த சான்ருேச் அல்லரோ கபிலர் பெருமானர் தாம் கண்ட காட்சியைகல் நெஞ்சையும் உருக்கும் கடுந்துயரக் காட்சியை-தாம் கேட்ட குரலே-குழலின் துன்ப இசை போன்ற அழுகுசலே யெல்லாம் வள்ளல் பேகனது அகவிழிகட்குக் கவிதை யாலேயே காட்சிப்படுத்திக் காட்டினர். கைவண்மை சான்ற பேக. நேற்று அருவழி கடந்து வருந்தி வந்த