பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் . 37

ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம் பலநாள் பயின்று பலரொடு செல்லினும் தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ: அணிபூண் அணிந்த யானை இயல்தேர் அதியமான் பரிசில் பெறு உங் காலம் நீட்டினும் நீட்டர்(து) ஆயினும் யானதன் கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத் தது.அது பொய்யா காதே; அருந்(த) ஏமாந்த நெஞ்சம்! வருந்த வேண்டா வாழ்கஅவன் தாளே! (புறம் 191) என இவ்வாறு மழவர் பெருமான் வ ள் ள ன்மையை வாயாரப் புகழ்ந்தார் ஒளவையார்.

வள்ளன்மையில் தலை சிறந்து விளங்கிய அதியமான் விரத்திலும் கிகரற்ற பெருவிறல் வேந்தகைக் காட்சியளித் தான். ஒரு நாளில் எட்டுத் தேரை இயற்றும் கைவல் தச்சன் ஒருவன் ஒரு திங்கள் முழுதும் அரும்பாடு பட்டுத் தேர்க்கால் ஒன்றை மட்டும் செய்வானுயின், அத்தேர்க் கால் எத்துனே வலிவுடையதாகும் அத்துனே உடல் வலி பெற்ற வல்லாண்மைக் குரிசிலாய் விள ங் கி ஞ ண் அதிகமான். அவன் படை வலி கண்டு அஞ்சாத திக் கில்லே; தன்மை தெரியாது, இளேயன் இவன், என இகழ்ந்த மாற்ருரையெல்லாம் இருங்களிறு அட்டு வீழ்க் கும் ஈர்ப்புடைக்கராம்போலக் கொன்று வீழ்க்கும் கடுங் திறல் படைத்து விளங்கினன். அத்தகை நெடுவேலோன் காட்டில் எறிகோலுக்கு அஞ்சாது சீறிப்பாயும் அரவினே ஒத்த மள்ளர் கூட்டம்-மழவர் கூட்டம்-மண்டிக் கிடக் தது. அவன் கனன்றெழுந்தால், மாற்ருர் ம. தி ல் க ள் நொறுங்கு ம் , ஒன்னர் படையெல்லாம் ஒடிச் சிதறும். கேளாருக்குக் காலனே ஒத்த அதிகன் கோபங்கொள்ளின், அவன் குருதிக் கொதிப்பேறிய கண் தன் அருமைக்