பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 45

விறலி ! பொருநரும் உளரோதும் அகன்தலை நாட்டு என வினவல் ஆனுப் பொருபடை வேந்தே ! எறிகோல் அஞ்சா அரவின் அன்ன சிறுவன் மள்ளரு முனரே; அதாஅன்று, பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை வளிபொரு தெண்கண் கேட்பின் *

அதுபோக் ' என்னும் என்னையும் உளனே!’ (புறம். 89, என்ற அருந்தமிழ்ப் பாடலேக் கூறி, அது வாயிலாக அதிகமான் நாட்டில் அடிக்கும் கோலுக்கும் அஞ்சாது எதிர்த்துப் பாயும் பாம்பின் இயல்பு படைத்த வலி மிக்க இ&ளயவீரர் எண்ணற்ருேர் உள்ளமையையும், அவ்விரர் படைத்தலைவனாய் விளங்கும் தம் தலைவன் மன்றின்கண் துரங்கும் முழவினிடத்துக் காற்றெறிந்த ஓசையைக் கேட் பின், ‘ ஆ, அது போர்ப்பறையின் முழக்கம்' என மகிழும் மனம் படைத்தவனுய் விளங்குவதையும் எடுத்துரைத்து, அவன் இதயத்தில் குடிகொண்டிருந்த இகலும் இறுமாப் பும் கரைந்து ஒழியச் செய்தார். இவ்வாறு ஒளவைப் பிராட்டியாரின் அரும்பெருக்தொண்டால், மூள இருந்த பெரும்போர் ஒன்றினின்றும் ஆயிரம் ஆயிரம் ஆருயிர் கள் உய்ந்தன.

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கியே தொண்டையர் கோனுக்கு அறிவு புகட்ட வேண்டும், என்று எண்ணி யிருந்த அதியமான், வாளேந்தி உயிர்களே வதைக் காமலே, சொல்லேந்தி அமைதி கிறுவிய அருந்தமிழ்ப் பெருமாட்டியாரின் ஆற்றலேக் கண்டு வியந்து போற்றித் தலை வணங்கினன்; தன்பால் அப்பெருமாட்டியார் கொண்டிருக்கும் பேரன்பினேயும், தன்னிலும் பெரிதாகிய தமிழகத்தின்பால் அ வ ர் கொண்டிருக்கும் பெருங் கருணையையும் எண்ணி எண்ணி மனம் உருகிகுன்; இத்