பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

给芝 சங்ககாலச் சான்ருேர்கள்

  • தமிழ் கூறும் நல்லுலகத்தின் பல்வேறு பகுதிகளேயும் கான விழைந்தார். அது காரணமாகத் தகடுரினின்றும் வெளிப்போக்தவர், வள்ளுவர் குடியில் தோன்றியவனும், நாஞ்சில் மலேக்கு உரியவனுமாகிய நாஞ்சில் வள்ளுவனைக் கண்டு, அவன் செம்மைசால் பண்பினன் என்பதை அறிந்து, அவன்பால் சென்று, பொன்னே துகிலோ ஏதும்பெற எண்ணுதவராய், உணவுக்குச் சிறிது அரிசியே வேண்டினர். அவனே, அருந்தமிழ்ப் புலவர் வரிசை அறிந்து வழங்குபவன் ஆகலின், ஒளவையாரின் பெருமை யெல்லாம் உணர்ந்தவனுய் யானேப் பரிசில் அளித்தான். அது கண்டு ஒளவையார் அவன் கொடையை வியந்து, செங்காப் புலவிர், காஞ்சில் மலை வேந்தன் மெல்லிய அறி வினனே. இஃது உறுதி. யாம் இலேக்கறிமேல் துரவச் சிறிது அரிசி வேண்டினேமாக, அவன் பரிசிலர்க்குதவும் வரிசை அறிதலால், எம் வறுமையைப் பார்த்தலே அன் றித் தன் மேம்பாட்டையும் சீர்தூக்கிப் பார்த்துப் பெரிய மலே போல்வதொரு யானேயை அளித்தான். ஆதலால், ஒருவர்க்கு ஒன்றனேக் கொடுக்குமிடத்து அப்பெற்றிப் பட்டதொரு தெளியாக்கொடையும் உளதோதான்! பெரி யோர் தாங்கள் செய்யக்கடவ முறைமையைத் தெரிந்து பாதுகாத்துச் செய்யார்கொல்!” எனக் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் அவனேப் புகழ்ந்தார்.

பின்னர் ஒளவையார் உறையூரின் கண் சோழ அரசன் இராயசூய வேள்வி இயற்றுகின்ருன் என்பது அறிந்து ஆங்குச் சென்ருர், அவன் சேரமான் மாரி வெண்கோவும் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியும் சோழ வேந்தளுேடு ஒருங் கிருக்கக் கண்டார். வாழ்நாளெல்லாம் தமிழ் வேந்தரும் தமிழ் வள்ளல்களும் தங்களுள் மாறுபாடு கொண்டு போரிட்டு மடிவதையே கண்டு மனம்வெந்திருந்த ஒளவை யாருக்குத் தமிழகத்து முடியுடை மூவேந்தரும் ஒருங்