பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் $3

கிருந்த காட்சி எல்லையில்லா இன்பத்தை அளித்தது. அவர் அவ்வின்ப உணர்வின் எல்லேயில்கின்று அம் மூவேந்தரையும் அருந்தமிழ்க் கவிதையால் போற்றினுச். மூண்டெழும் போருக்கெல்லாம் அடிப்படைக் கார ணம் மண் வெறியும் புகழ் கசையுமே என்பதை கன் குனர்ந்த அச்சான்ருேர், அம்மண்ணுள் வேந்தர் மனம் கொளும் வகையில் தம் இதயக் கருத்தை எடுத்துரைக்க லானுர் : தேவர் உலகை ஒத்த பகுதிப்பட்ட நாடு தம் முடையது ஆயினும், அஃது எப்போதும் தம்மோடு உசி மைப்பட்டே கடவாது ; ஒருவர் அந்நாட்டிற்கு உரியவர் அல்லர். ஆயினும், கற்றவம் செய்தோராயின், அஃது அவர்க்கே உரித்தாகும். ஆகையால், விேர் யாசிக்கும் அறவோர் ஈர்ங்கை கிறையப் பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து, ஒண்டொடி ம க ளி ர் பொலங்கலத் தேந்திய தண்கமழ் தேறல் மாந்தி மகிழ் சிறந்து, இர வலர்க்கு அருகாது சந்து, உங்கட்கு அறுதியிட்ட வாழ் நாள் முழுதும் வாழ்தல்வேண்டும். ஒருவர் பிறவிப் பெருங் கடலேக் கடக்கத் தாம் செய்த கற்கருமமன்றி கற்புணை அறிதொன்றுமில்லை. அந்தணர் வேள்வியில் வளர்க்கும் முத்திப்போலக் கண்ணுக்கினிய கவின் மிக்க காட்சியுடன் ஒருங்கிருந்த கொ ற் ற வெண்குடைக் கொடித்தேர் வேந்தர்களே, இவ்வாறு நீங்கள் கூடி உறைதலால் உண் டான பீடும் பயனும் நன்மையும் புகழும் யானறிந்து உரைக்கும் அளவினவோ? உங்கள் வாழ்நாள் விண் மீனினும், மழைத்துளியினும் சிறந்து பெருகுவதாக!” எனத் தமிழக வேந்தர் உணர்ந்து உய்யும் வகையில் அறிவுரை கூறி வாழ்த்தினர்.

முத்தீப் புரையக் காண்டக இருந்த கொற்ற வெண்குடைக் கெரடித்த்ேர் வேந்திர் ! யானறி அளவையோ இதுவே!" (புறம். 6ே7)