பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§4 சங்ககாலச் சான்ருேக்கள்

என்னும் இவ்வருமை சான்ற அடிகளேத் தன் அகத்தே கொண் டு சங்க இலக்கியத்துள்ளேயே ஒளி மிக்க மணியாய் விளங்கும் இப்புறப்பாடலேப் படிக்குந்தோறும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே பல்லாற்ருனும் சிறந் திருந்த இன்பத் தமிழகத்தைச் சீரழிக்கக்கூடிய கொடு கோய் எதுவென உணர்ந்து அங்கோய் தீர மருந்தும் காட்டிய அவ்வருந்தமிழ்த் தாயரை எண்ணி எண்ணி, * அன்னேயீர், எங்கள் தலைமுறையிலேனும் ஒற்றுமை யால் உய்க்து உலகு போற்றும் ஒப்பற்ற சாதியாய் விளங்குவோம். அதுவேயன்றி, உமக்கு வேறென்ன கைம்மாறு செய்ய வல்லேம் ?’ என்று நம் தமிழ் உள்ளம் உருக்கத்துடனும் உ ஆறு தி யு ட னும் முழங்குகின்றது அன்ருே ?

இவ்வாறு தமிழகம் அன்றும் இன்றும் உய்வதற்கு உரிய ஒரு பெருநெறியினேக் காட்டி ஒற்றுமைச் சங் கொலித்த சான்ருே ராகிய ஒளவையாரின் பிறப்பைப் போன்றே அவர் முடிவைப் பற்றியும் நாம் ஏதும்.அறிக் திலோம்.

ஒளவைப்பிராட்டியாரின் பொன்னுடலம்-அண்ணல் அதிகமான் அளித்த அருங்கனியால் நீண்ட காள் தமி ழகத்தில் வாழ்ந்து தொண்டு புரிந்த திருவுடலம்-எங்கு -எப்பொழுது-எவ்வாறு மறைந்ததோ! அந்தோ! அருந்தமிழ்ப் பெருமாட்டியாரின் பொன்னுடலம் மாய்ந்து அவருடற் பூந்துகள் ஆர்ந்ததும் நாம் பிறந்து வாழும் இத்தமிழ் மண்ணிலேதான் என்பதை எண்ணும் போது கம் உடலெல்லாம் சிலிர்க்கிறது! அன்னேயாரின் திரு வுடலம மறைந்தாலும், அவருடைய அருந்தமிழ்க் கவிதைகள் என்றும் நமக்கு வழி காட்டும் சுடர் விளக்கு களாய்த் திகழ்வது திண்ணம்.

தமிழகம் கால வெள்ளத்தில் நீர்க்குமிழிபோல அழிக்