பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெண்டிர் நிலை

99

கடந்து இன்புறுதல் போல, என் கணவரை முயங்கி இன்புறேனாயினும், அவர்க்குரிய அடித்தொண்டுகளைச் செய்து இன்புற்றேன்", எனத் தலைவியொருத்தி கூறுகின்றாள்."[1]

பகைவர் முன்னே ஆண் சிங்கத்தினைப் போலத் தலை நிமிர்ந்து நடக்கும் ஆண்மையினைத் தம் கணவர்க்கு அளிக்க வல்லவர் கற்புடைப் பெண்டிரேயாவர். இவ்வாறு தாம் புகுந்த குடும்பத்திற்கு ஆக்கக் தருதல்போலத் தாம்பிறந்த குடியிலுள்ளார்க்கு வெற்றியும் புகழும் விளைவிப்பாரும் அம்மகளிரே என்பது அறிஞர் கொள்கை. "மலை வாணர் மகளிர் தம் கணவரைத் தெய்வமென்று வணங்கி எழுதலைத் தமது கடமையாகக் கொண்டமையால், அவருடன் பிறந்த ஆடவர் தாம் தொடுத்த அம்புகளை இலக்குத் தப்பாமல் எய்யும் ஆற்றல் பெற்றனர்,” எனக் கபிலர் குறிஞ்சிக்கலியிற் (39) குறிப்பிடுகின்றார்.

தமிழ் மகளிர் தம் கணவனைப் பிரியாது. வாழும பெற்றியினராவர். தம் ஆருயிர்த் தலைவன் இறக்க நேர்ந்தால், நெஞ்சு கலங்கி, அவனது பிரிவாற்றாது உடனுயிர் விடும் பெருங்கேண்மை செந்தமிழ்ப் பெண்களின் சிறந்த பண்பாகும். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தனது அரசியல் பிழைத்தமைக்கு இரங்கி உயிர் துறந்த பொழுது அவன் மனைவியாகிய கோப்பேருந்தேவி தன்னுயிர் கொண்டு அவனுயிரைத் தேடிச் செல்வாள் போலத் தான் உடனே உயிர் துறந்தமை தமிழ் நாட்டுப் பெண்களின் தலையாய கற்பினை இனிது புலப்படுத்துவதாம். கணவன் இறந்தமைக்கு இரங்கிய மகளிர் தீ வளர்த்து அதன்கண் வீழ்ந்து இறத்தலும் உண்டு. பூதப் பாண்டியன் இறந்த பொழுது அவன் தேவியாகிய பெருங்கோப்பெண்டு, சான்றோர் பலர்{


  1. 1.குறுந்தொகை 51