பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

சங்ககாலத் தமிழ் மக்கள்

உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்னும் புலவர் பெருமான், அவர்களது கல்வித் திறத்தின் உயர்வினைப் பற்றி எடுத்துரைப்பதாக அமைந்த பாடலொன்று புற நானூற்றில் உள்ளது.

"ஞாயிற்றினது இயக்கமும், அதனுடைய ஈர்ப்பாற்றலும், அவ்வாற்றலால் இழுக்கப்பட்டு அஞ் ஞாயிற்றைச் சுற்றி வரும் இப்பார் வட்டமும், இப்பூமியில் காற்று வீசும் திசையும், காற்றின்றி வறிதேயுள்ள ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை அங்கங்கே சென்று நேரிற்கண்டறிந்தவர்களைப்போலச் 'சென்ற காலத்து இவ்வாறு இருந்தன ; இப்பொழுது இன்ன நிலையில் உள்ளன ; இனி எதிர் காலத்து இன்ன தன்மையை அடைவன, என்று மூன்று காலத்தும் அறுதியிட்டுச் சொல்லும் கல்வியையுடைய பெரியார்களும் இந்நாட்டில் உள்ளார்கள்,” என்பார்,


"செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமு மென்றிவை
சென்றனந் தறிந்தோச் போல் வென்றும்
இனைத்தென் போரும் உளரே.”

-புறம் 30.

எனக் கூறுகின்றார்,

ஞாயிற்றின் பரிப்பினால் (இழுப்பாற்றலால்) பூமி அதனைச் சூழ்ந்து வருதலும், வானம் காற்றின்றி இருத்தலும் ஆகிய உண்மைகள் இப்பாடலில் குறிக்கப்பட்டன. இக்கால ஆராய்ச்சியாளர் நுண்ணிய கருவிகளைக் கொண்டு கண்டறிந்த இவ்வுண்மைகளை உறையூர் முத்துகண்ணன் சாத்தனார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறி-