பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

சங்ககாலத் தமிழ் மக்கள்


'நீரிற்பலகால் முழுகுதல், நிலத்தில் பாய் முதலியன இன்றிப் படுத்தல், தோல் உடுத்தல், சடை புனைதல், தீயோம்பல், ஊரடையாமை, காட்டிலுள்ளவற்றை உணவாகக் கொள்ளுதல், கடவுட்பூசை' என்னும் இவ்வெண் வகைச் செயல்களும் தவத்தின்கண் முயல்வார்க்கு உரியனவாக விதிக்கப்பட்டன. மழை, பனி, வெயில் முதலிய இயற்கையின் காரணமாகத் தமக்குற்ற நோய்களைப் பொறுத்துக்கொண்டு எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமையாகிய அருளுணர்வுடன் வாழ்தலே தவத்தின் இயல்பாகும் என்பார்.

பகலும் இரவும் இடைவிடாது வானத்தை நோக்கியிருந்து, அங்கு நிகழும் வானவில்லும், மின்னலும், விண்மீன் வீழ்வும், கோள் நிலையும் பார்த்து, மழை, பனி, வெயில் என்ற மூவகைக் காலத்தின் இயல்புகளையும் விளங்க அறிவுறுத்தும் வானநூற்புலவன் அறிவனாவான். இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலத்தியல்பினையும் கண்ணி (கருதி) உரைக்கும் இவனேக் கணிவன் என வழங்குதல் மரபு.

தமிழ் மூவேந்தரும் தத்தம் நாட்டின் அரசியல் நிகழ்தற்குரிய தலைநகரங்களாகிய பேரூர்களைச் சிறந்த முறையில் அமைத்துக் கொண்டனர் சேரரது தலைநகர் வஞ்சி; பாண்டியரது தலைநகர் மதுரை; சோழரது தலைநகர் உறையூர் காவிரி கடலொடு கலக்குமிடத்தில் கடல் வாணிகத்திற்கேற்ற துறைமுகநகரமாகச் சோழர்களால் அமைக்கப்பட்ட பேரூர் காவிரிப்பூம்பட்டினம். காவிரி கடலொடு கலக்குமிடத்தில் அமைந்தமையால் இதனைப் 'புகார்’ எனவும் வழங்குவர். இந்நகரத்தினை 'மருவூர்ப்பாக்கம்’ 'பட்டினப்பாக்கம்’ என இரு பகுதியாகப் பிரித்திருந்