பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

சங்ககாலத் தமிழ் மக்கள்

பாடல் என்னும் நூலில் ஒரு புலவர் மதுரை நகரத்தின் இயல்பினை அழகாக எடுத்துரைத்துள்ளார்.

இந்நகரங்களில் வாழும் பெருஞ்செல்வர்கள், கடல் வழியாகவும் தரை வழியாகவும் வாணிகஞ் செய்து பெரும்பொருளீட்டி, 'மன்னர் பின்னோர்' என அரசனுடன் அடுத்துப் பாராட்டப் பெறும் சிறப்புடையவர்களாய்த் திகழ்ந்தார்கள். வடித்த கஞ்சி ஆறுபோலச் செல்லும் பெருஞ்சோற்று அறச்சாலைகள் இந்நகரங்களில் அமைந்து, ஏழை மக்களின் பசியை அகற்றின. உலகத்திலுள்ள பல்வேறு உணவுப் பொருள்களும் பொன்னும், நவமணிகளும், பட்டினும் பருத்தியிழையினும் நெய்த மெல்லிய ஆடைகளும், வாழ்க்கைக்குத் தேவையான பிற பொருள்களும் விற்றற்குரிய ஆவண வீதிகள் (கடை வீதிகள்) இந்நகரங்களில் மிகுந்திருந்தன. கடை வீதிகளில் விற்கும் பொருளையும் விலையையும் குறித்துக் கொடிகள் கட்டப்பட்டன. வாணிபங் கருதி இக்காட்டிற் குடியேறிய யவனர் முதலிய வெளிநாட்டு வணிகர், வேற்றுமையின்றிக் கலந்திருந்து இந்நகரங்களில் தத்தம் தொழில் செய்து வாழ்ந்தனர்.

பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானுக்கும், அறுமுகச் செவ்வேளாகிய முருகனுக்கும், நீலமேனி நெடியோனகிய திருமாலுக்கும், வெள்ளிய சங்கின் நிறத்தையுடைய வாலியோனாகிய பலதேவனுக்கும் உரிய திருக்கோயில்கள் இந்நகரங்களில் அமைந்திருந்தன. இவையன்றிக் கொற்றவை கோயிலும், காமவேள் கோட்டமும், சாத்தன் கோயிலும், சமணப்பள்ளியும், போதி அறவோன வழிபடுதற்குரிய புத்த விகாரமும், இந்திரன் கோயிலும், காவற்பூதங்களின் கோயில்களும், இத்தலை