பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெண்டிர் நிலை

93

கடவுளை வணங்கியெழுவது உலகியல், ‘தெய்வத்தை முதற்கண் தொழுது நின்று எழாது, தன் கணவனையே முதற்கண் வணங்கி கின்று துயிலெழுவாள், ‘பெய்’ என்று சொன்ன அளவிலே மழை பெய்யும்’, என்றார் தெய்வப் புலவர்.

“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”

என்பது திருக்குறள் (55), இங்கனம் கூறுதலால், பெண்கள் கடவுளே வணங்கக் கூடாதென்பது ஆசிரியர் திருவள்ளுவனாருடைய கருத்தெனக் தவறாக எண்ணிவிடுதலாகாது; காலைப் பொழுதில் எழுந்து கடவுளை வழிபடுதற்கு முன் தமக்குக் கட்புலனாகுந் தெய்வமாகிய கணவனை முதற்கண் வழிபடுதல் வேண்டுமென்பதே ஆசிரியர் கருத்தாகும்.

தம்மாற் காதலிக்கப் பெற்ற தலைவனையே மணந்து கொள்ளவேண்டுமென்ற விருப்பத்தால் மகளிர் இறைவனை மலர் தூவி வழிபடுதல் மரபாகும். ‘மலைவாணர் மகளொருத்தி, தன்னால் விரும்பப்பட்ட தலைவனுக்குங் தனக்கும் விரைவில் மணம் நிகழ வேண்டுமென்ற பேரார்வத்தால், தம் குலமுதற்கடவுளாய் மலையில் எழுந்தருளியுள்ள இறைவனை நன்னீருடன் நறுமலர்களைக் கையிற்கொண்டு அருச்சித்து வழிபட்டனள்’, என ஐங்குறு நூற்றுப் பாடலொன்றிற் கபிலர் (259) கூறுகின்றார்.

சிவபெருமான், மாயோன், முருகன் முதலாய தெய்வங்களுக்கு வழிபாடு செய்தற்கென அந்தியிற் செய்யத் தொடங்கிய திருவிழாவிலே மதுரை நகரத்தில் வாழும் பேரிளம்பெண்டிர் தாமரைப் பூவினைக் கையிலே பிடித்தாற்போன்று தாம்பெற்ற இளங்குழந்தைகளைக் கையினால் தழுவிக்கொண்டு, தம் கணவருடன் பூசைக்கு வேண்டும் பூவும் நறும்புகையுமாகிய பொருள்களோடு திருக்கோயி-