பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சேரர்

'சினனே, காமம், கழிகண் ளுேட்டம்,

அச்சம், பொய்ச்சொல், அன்புமிக வுடைமை, தெறல் கடுமையொடு பிறவும், இவ்வுலகத்து அறந்தெரி திகிரிக்கு வழியடை யாகும் , தீதுசேண் இகந்து, நன்றுமிகப் புரிந்து, கடலும், கானமும் பலபயம் உதவப், பிறர்பிறர் ஈலியாது, வேற்றுப் பொருள் வெஃகாது, மையில் அறிவினர் செவ்விதின் நடந்து, தம் அமர்துணைப் பிரியாது, பாத்துண்டு, மாக்கள் மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய, ஊழி உய்த்த உரவோர் உம்பல்!” (பதிற்று: உஉ)

இவ்வாறு அறவுரைபல வழங்கியும், குட்டுவன் மறக் குணம் மாருமையினே க் கண்டார் புலவர். ஒருவர் எவ் வளவு நூல்கற்று எத்துணை அறிவுபெற்ருராயினும், அவர், இவ்வுலகம் கிலேயற்றது, வாழ்வு கிலேயற்றது, இவ்வுலக இன்பம் அழியும் இயல்பினது என்ற இந்த அறிவினைப் பெருராயின், அவர் நல்வழிப்படுதல் இல்லை; இந்த உண்மை யுணர்ந்த புலவர், சோமான் உளத்தே கிலேயாமை எண்ணம் கின்று சிலவத் துணை புரிதல், தம் கடன் எனக் கொண் டார் ; உடனே, அரசனே அணுகி, அறவோன்மகனே' என அவன் உள்ளத்தே அறவுணர்வு தோன்ற விளித்து, " கின் ஆற்றற் பெருமையைப் பகைவர் அறியின், அதனல் அவர் ஆக்கம் மிகுமாதலின், அதை அவர் அறியாவண்ணம் மறைத் தும் குறைவேண்டியும் முறைவேண்டியும் கின் பால் வந்து கூறுவார் கூற்றுகளின் உண்மைகளை உள்ள வாலுணர்ந்தும், பகற்காலத்தே பகைப்புலம் சென்று போரிடும் கின் படையாளர்க்குத் துணைபுரிந்தும், இரவுக் காலத்தே அமைச்சர், சான்ருேர் உள்ளிட்டாரோடிருந்து மேல் செய்யக்கடவனவற்றை ஆராய்ந்து நோக்கியும் வாழும் அரசியல் மேற்கொண்டிருக்கும் கினக்கு, ஒன்று கூறவிரும் புகின்றேன்; அருள்கூர்ந்து கேட்பாயாக தம்மையொத்த அரசர் உலகில் யாண்டும் இலர் என்று பெருமைதோன்றப் பேரரசு மேற்கொண்டு வாழ்ந்த அரசர்களும், இவ்வுலகில்