பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலை பாடிய பெருங்கடுங்கோ 99

  • தன்மை, அந் நாட்டு அரசனினும், அந்நாட்டு அமைச்ச னேப் பொறுத்தே அமையும்; அமைச்சன் எல்லனுயின், அரசனும் கல்லனும் ; ஆட்சியும் நன்றாம்; அவன் தியன யின், நல்லரசும் தீதாம் ; அக் காட்டுக் குடிகள் அழ அழப் பொருள் பறிக்கப்படுவர் ; அதனுல், கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில், கடும்புலி வழங்கும் காடு நன்றே” என்ற எண்ணமுடையராகி, நல்லிடம் தேடிச் சென்று விடுவர் ; அத்தகைய காட்டினுள், பகையரசர் படை எளிதிற் புகுந்து வென்றிகொண்டு வெறியாட்டம் ஆடும். இந்த உண்மைகளை உணர்ந்து கூறிய பாலை பாடிய பெருங் கடுங்கோ, பாரோர் போற்றும் பேரரசு மெற்கொண்டோ ராவர் என்பதில் சிறிதும் ஐயம் இராதன்ருே ! * நடுவிகந்து ஒரீஇ நயனிலான் வினைவாங்கக்

கொடிது ஒர்த்த மன்னவன் கோல்போல, ஞாயிறு கடுகுபு கதிர்மூட்டிக் காய்சினம் தெறுதலின்.' (கவி : அ) அலவுற்றுக் குடிகடவ ஆறின்றிப் பொருள் வெஃகிக் கொலையஞ்சா வினைவரால் கோல்கோடி யவன்நிழல் * உலகுபோல் உலறிய உயர்மா வெஞ்சரம்.” (கலி: கC) ஆள்பவர் கலக்குற அலேபெற்ற நாடுபோல் பாழ்பட்ட முகத்தோடு பைதல்கொண்டு அமைவளோ.:

(கலி : தி) 4 பேதையோன் வினைவாங்கப் பிடிலா அரசன் காட்டு

ஏதிலான் படைபோல இறுத்தந்தது.” (கவி: உஎ)

ட்சிநெறி உண்டாதற்கே காரணமாவதும், அவ் ஆட்சிநிலை அவ்வப்போது மாறுதற்குத் காரணமாவதும், உலக வாழ்விற்கே உயிர் அளிப்பதும் பொருள். ஆகவே, அரசராவார், அப்பொருளின் இயல்புகளை உள்ளவாறு உணர்ந்தவராகல் வேண்டும். பேராசாய பாலபாடிய பெருங்கடுங்கோவும், பொருளின் உண்மை இயல்புகளை உணர்ந்து உணர்த்தியுள்ளார்.

ஒருவர், தீ தெறியிற் செல்லாது, நன்னெறியில் கின்று வாழும் நல்வாழ்வையும், பிறர் மனேமுன் கின்று பிச்சை