பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு. வஞ்சன்

சோவேந்தர் வழிவந்தாருள் வஞ்சனும் ஒருவன்; இவன் பெயர் அஞ்சன் எனவும் அழைக்கப் பெறும்; வஞ் சன், பாயல் நாடு ஆண்ட பேராசனுவன் ; பண்டு பாயல் நாடு எனப் பெயர்பூண்டிருந்த நாடு, பின்னர் வயநாடு என்று ஆகி, இப்போது வைகாடு என வழங்குகிறது ; வைகாடு காலுக்காவில், அஞ்சுகுன்னு என்ற பெயருடைய தொரு மலேயுளது ; பாயல் மலைப்பகுதியில், வஞ்சனுக்கு உரியதாய், அஞ்சன்குன்று எனப் பெயர்பூண்டிருந்ததே, இக்காலே அஞ்சுகுன்னு எனத் திரிந்து வழங்குகிறது என்ப. இதல்ை, வஞ்சனுக்கு உரிய பாயல்நாடு, வடக்கே வயடுை வட்டத்திலிருந்து, தெற்கே அஞ்சளுடு முடியப் பரவியிருந் தது என்பது புலனும், இனி, குடகுநாட்டுக் கல்வெட் டொன்று அஞ்சனகிரி மாளிகை’ என்ற ஒரு பெயரைக் குறிப்பிடுகிறது. பாயல் நாடாகிய வயடுை, சென்ற நூற் ருண்டின் இறுதிவரை, குடகுநாட்டோடே சேர்ந்திருந்தது எனக் கூறுவர் வரலாற்று நூல் வல்லார். இப்போதுள்ள நீலகிரி மாவட்டமும், வயளுட்டோடு சேர்ந்திருந்து கி. பி. 1887-ல் தான்் பிரிந்தது; இதல்ை, இன்று நீலகிரி என வழங்கும் மலை, பண்டைய அஞ்சனமலையே எனல் பெறப் படும்; இதை ஏற்றுக்கொள்வதாயின், வஞ்சன் ஆட்சி நடந்த இடம், இன்றைய நீலகிரி மாவட்டத்தையும் உள்ள டக்கிய பகுதியாம் என்பது துணியப்படும். (ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை புறநானூறு : பகுதி : 2: பக்கம்: 458, 461.)

வஞ்சன், கொடையும் கொற்றமும் ஒருங்கே உடை யவன் ; வஞ்சன், தன் மூதூர் மன்றத்தே, பரிசிலரை வரவேற்க அமைத்த, அழகிய மணநாறும் பந்தர்க்கீழ் இருந்து, வருவார் தம் வரிசையறிந்து வழங்கும் வள்ளி யோனுவன் ; அவனுடைய மூதூர், அரிய அரண்பல அமை யப் பெற்றது; அவ்வாண், அவன் பகைவர்க்குப் புலிகள் கிடந்து உறங்கும் கன்முழைஞ்சுகளே போல், போச்சம்