பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. இராசசூயம் வேட்டபெருநற்கிள்ளி

இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சங்ககாலச் சோழ வேந்தர்களுள், காலத்தால் பிற்பட்டோனவன் ; இவன் சோணுட்டு அரியனையில் அமர்ந்திருந்த காலத்தே, பாண்டி நாட்டில் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெரு வழுதியும். சேர நாட்டில் பாரிவெண்கோவும் மன்னர்க ளாய் மணிமுடி பூண்டிருந்தனர் ; பேரரசு பலவற்றை அழித்தப் பெருமை கொண்டோரே இாசசூய வேள்வி இயற். கல் கூடும் என்ப; அத்தகு வேள்வி இயற்றிய பெரு வேக்சினவன் இப் பெருநற்கிள்ளியும். அஃது இவன் பெயரால் புலப்படுகிறது. ஆகவே, இவன், அக்கால அரசுகள் பலவற்றை அழித்த ஆண்மையாளன் என்பது புலனும், வேந்தர் பலரை வென்று, இவ்வாறு வீறுகொள்ளுதற் கேற்ற காற்பெரும் படைகளே எனிமிகப் பெற்றிருந்தான்் இப்பெருநற்கிள்ளி. - - -

உலோச்சனுர் எனும் உயர்தனிப் புலவர், ' புள்ளி கள் கிறைந்த நெற்றியும், பூண்செறிந்த கோடும் கொண்ட யானேப் படையும், காற்றெனக்ககுேம் குதிரைப் படையும், ஒலிக்கும் மணியும் ஒடும் உருளையும் ஆடும் கொடியும் கொண்ட தேர்ப்படையும், விரைவும் வன்கண்மையும் வசை யில் புகழும் பொருந்திய பெரு வீரர்களும் நிறைந்த அவன் நாற்படை, அவன் எண்ணுரை விலகுலைக்கும் நீர்மையவாம்’ எனக கூறுவா .

'புகர்துதல், அவிர் பொற்கோட்டு யானையர் :

இவர் பரிக்கச்சை நன்மாவினர் ;

வடிமணி, வாங்குருள -

கொடிமிசைால் தேர்க்குழுவினர் :

கதழ், இசை, வன்கணினர் ;

வாளின் வாழ்ார் ஆர்வமொடு ஈண்டிக் -

கடல்ஒலி கொண்ட தான்ே.” (புறம் : கூஎன்)

போரில் பிறர் துணை வேண்டாப் பிடுடையணுய பெரு, நற்கிள்ளி, இவ்வாறு படை வலியாலும் பாடுற்று விளங்கி