பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசசூயம் வேட்டபெருநற்கிள்ளி 15

மாரு திருக்கும் என்று கூறுவதற்கும் இல்லை. ஆதலின், சண்டு வாழும்வரையில் தம்பால் வந்து ஏற்போர்க்குப் பூவும் பொன்னும் புனல் வார்த்தித்தத்து புகழ்பெற வாழ் தல்வேண்டும். இறந்து மறைந்து போவுழி, இவ்வுலகில் இயற்றிய இவைபோலும் கல்வினையல்லது, இங்ாாடோ, இங் நாட்டுச் செல்வமோ துணையாகா, கல்வினேயே ஏற்றுணை யாம்; ஆகவே அன்பொடு கலந்த இன் புடை வாழ்வின சாகுக !” என்று அறிவுரைகூறி அகம் மிக மகிழ்ந்தார்.

" நாகத்தன்ன பாகார் மண்டிலம்

தமவே ஆயினும், தம்மொடு செல்லா: வேற்முேராயினும் நோற்முேர்க்கு ஒழியும் ; எற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும், பொன்னும் புனல்படச் சொரிந்து, பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய நாாரி தேறல் மாந்தி, மகிழ்சிறந்து இாவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி, வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல் : வாழச் செய்த கல்வினை யல்லது ஆழுங்காலைப் புணைபிறிது இல்லை , ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் முத்தீப் புாையக் காண்டக இருந்த கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்! யானறி அளவையோ இதுவே.” (புறம்: க.சு எ)

இவ்வாறு பீடும் பெருமையும் விளங்கப் பாராண்ட பெருகற்கிள்ளியைப் பெற்றெடுத்த பெரும்பேறுடையார் யாவர். அவன் மக்களாய்ப் பிறந்து மாண்புற்ருர் யாவர்? என்பனவற்றை ஐயமற அறிந்து கூறு கற்கியலவில்லை; பெரு கற்கிள்ளி, காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளியின் மக குய்ப் பிறந்து, சோன் செங்குட்டுவனின் மைத்துனனுய் மாண் புற்ருேளுவன் எனக் கூறுவர் அறிஞர் சிலர். அவர் தம் கொள்கை எத்துணேப் பொருத்தம் உடைத்து என்பது கரிகாற் பெருவளத்தான்் என்ற தலைப்பின்கீழ் விளங்க உரைக்கப்பட்டுள்ளது, ஆண்டுக் காண்க.