பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

சோழர்

மலங்குமிளிர் செறுவில் தளம்பு தடிந்திட்ட பழனவாளைப் பரூஉக்கண் துணியல், புதுநெல் வெண்சோற்றுக் கண்னுறை யாக விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி நீடு கதிர்க் கழனி சூடு தடுமாறும் வன்கை வினைஞர் புன்தலைச் சிரு.அர்

தெங்குபடு வியன் பழம் முனையின் தந்தையர்

குறைக்கண் நெடும்போர் ஏறி விசைத்தெழுந்து செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும் வைகல் யாணர் கன்னட்டுப் பொருகன், எஃகு விளங்கு தடக்கை இயல் தேர்ச் சென்னி, சிலேத்தார் அகலம் மலைக்குநர் உளர் எனில் தாமறிகுவர் தமக்கு உறுதி யாமவன் எழுவுறழ் திணிதோள் வழுவின்று மலேங்தோர் வாழக் கண்டன்று மிலமே ; தாழாது திருந்தடி பொருத்த வல்லோர் வருந்தக் காண்டல் அதனினும் இலமே.”