பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சோழர்

கொணர்ந்த கரிகாற் பெருவளத்தான்ைச் சோணுட்டாக

ளுக்கினர் என்பர் சிலர் ; அவர்கள் அவ்வாறு கொள்வ.

தற்குக் காரணமாய் விளங்குவன,

“கழுமலத்தில் யாத்த களிறும், கருவூர்

விழுமியோன் மேற்சென் றகல்ை,-விழுமிய வேண்டினும், வேண்டா விடினும் உறற்பால நீண்டா விடுதல் அரிது.”

என்ற பழமொழிச் செய்யுளும், "கழுமலம் என்னும் ஊரின்கண்ணே பிணித்த சின்ற களிறும், கருவூரின் கண்ணே யிருந்த கரிகால் வளவன் கடித இளையணுயினும், அவன் சிறப்புடையணுதலால் அவன்மேற் சென்று தன் மிசை எடுத்துக்கொண்டு அரசிற்கு உரிமை செய்தது.”

என்ற அதன் உரையுமேயாம்.

பண்டை நாட்களில் அரசனே எல்லாம் ; அவன் தவறு செய்தால் அதை எடுத்துக்காட்டி அறிவுரை கூறிச் சில அறிஞர்கள் ஒரோவழி முயன்றது. தவிர, அமைச் சர்கள், ஆளுங்குழு என்ற வகையில் ஒர் அமைப்பு முறை இருந்ததாகக் கொள்வதற்கில்லை ; அரசன் இறந்தால், அவனுக்குப்பின் அவன் மகனே அரசளுதல் வேண்டும் என்ற முறையே நிலவி வந்துளது. அரசன் மகப்பேறின்றி இறந்தான்் எனில், நாட்டில் ஆளும் அமைப்பு என ஒன்றில் லாமையால், அடுத்த அரசன் யாவன் என்பதை உறு செய்ய மாட்டாாாய், வேற்றரசன் வருகையை எதிர்நோக்கி யிருப்பதல்லது, அக் காட்டுக் குடிகள் பிறிதொன்றும் செய்யார் , அரசர் மரபில்வந்த ஆற்றல்மிக்க ஒருவனே, அல்லது வேற்று நாட்டாசன் ஒருவனுே தன் முயற்சியால் அங் காட்டைக் கைப்பற்றி ஆள்வன்; இதுவே, தமிழகச் தில் பண்டு கிலவிய அரசியல் முறை. - -

ஐம்பெருங்குழு, எண்போாயம் என்ற அமைப்பு முறை வந்த பிற்காலத்தே, அரசன் மகப்பேறின்றி மறைந்துவிட்டால், அவன் மரபில் தக்காரைத் தேர்வதோ, அன்றி யானேவழி ஆள்வோரைத் தேர்வதோ, அக்குழு