பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 34. சோழர்

குலத்தான்் என்ற குறிப்போ காணப்படவில்லை. யானே தந்தது எனக்கூறும் பழமொழியே வேறு செய்யுட்களால் கரிகாலன் பகைவர் கையகப்பட்டுச் சிறை வைக்கப்பெற் முன் என்றும், பின்னர் இரும்பிடர்த்தலையார் துணை கொண்டு வெளிப்போந்தான்் என்றும் கூறுகிறது. இவற் றையும் ஏற்றுக்கொள்வதாயின், யானையைக்கொண்டு கரிகாலனே அரசனுக்க முன்வந்தோர் யாவர் அவன் வந்ததும் குழப்பம் விளேத்து, அவனேச் சிறைசெய்தோர், யானைத் தேர்வின்போது வாளாஇருந்தனர் எனல் பொருங் துமா ? தாயத்தார் அவனேச் சிறை செய்யும்பொழுது, அவனே யானேவழித் தேர்வுமூலம் அரசனுக்கியவர் யாது செய்தனர் ? அப்போது அவர்கள் வாளா இருந்தனர் எனக்கோடல் பொருந்துமா ? என்பனபோலும் ஐயங்கள் பல உண்டாதலும் கூடும். கருவூரும், கழுமலமும் சேர நாட்டு நகரங்கள் ஆகும். சோனுட்டரசன் தேர்விற்குக் கழுமலத்தினின்றும் யானே விடுவதும், அது கருவூரில் வாழ்ந்த விழுமியோன் ஒருவனைத் கேர்வதும் வரலாற்று முறையொடு முரனுடையதாகும். அப் பழமொழிப் பாட்டான் குறிப்பிடப்படும் செயல், சேரநாட்டில் நடை பெற்ற அந்நாட்டு அரசன் தேர்வு ஒன்றைக் குறிப்பதாகக் கொள்வதல்லது, அதைச் சோணுட்டு அரசியலொடு தொடர்புபடுத்தல் பொருந்தாது. ஆகவே, பழமொழியும் அதன் உரையும் குறிப்பிடும் யானேவழி அரசர் தேர்வு, கரிகாலனைப்பற்றிய கற்பனேயேயன்றி உண்மையன்று எனக் கொள்க.

பகைவர் சிறையகத்தே வாழ்ந்திருந்த கரிகாலன், அதனினின்றும் மீளும் வழிவகைகளை எண்ணித்துணிந்து தக்கார் துணையையும் பெற்று, ஒருநாள் பகைவருடைய திண்ணிய காவலைத் தன் வாள் துணை கொண்டு திடுமெனத் தாக்கி வென்று வெளியேறி, விடுதலைபெற்றுத் தனக்குரிய அரசுரிமையைக் கைப்பற்றிக்கொண்டான் ; கரிகாலன் செய்த செயற்கரும் இச்செயல் கடியலூர் உருத்திரங்கண்ண ஞாால் மிகமிக அழகாகப் பாராட்டப்பெற்றுளது; கூரிய