பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சோழச்

கொன்னே கடலிற் போய்ச்சேரும் காவிரிநீரைப் பயன் படுத்திக்கொள்ள எண்ணிக், காவிரியின் இருமருங்கும் சன அமைத்து அனே கட்டி நீரைத் தேக்கி, நீர்வளத்தைப் பெருக்கிச், சோழ வளநாடு சோ அடைத்து,” என்ற சிறப் பிற்குக் காரணமாய்க் கவின் உற்ருன் ,

'காடு கொன்று நாடாக்கிக்

குளம் தொட்டு வளம் பெருக்கி."

(பட்டினப்பாலை : உஅக-ச) நாட்டை வளமுடையதாக்கி விளைபொருள் வளர வழி செய்ததோடு அமைதி உருத கரிகாலன், தன் காடு, செல் வத்தாலும் சிறந்ததாதல் வேண்டும் என்று விரும்பினன் ; விரும்பிய அவன், அதற்குத் தலைநகர் உறையூர்போலும் உள்நாட்டு ஊராக இருத்தல் கூடாது என உணர்ந்து, காவிரி கடலோடு கலக்குமிடத்திற்கு அண்மையில், காவி ரிப்பூம் பட்டினம் என்ற அழகிய நகர் ஒன்றை அமைத் தான்் ; அதனுல் கடல் வாணிபம் வளர்ந்து நாட்டுச் செல்வம் பெருகிற்று வாணிபப் பொருள்களை வகைப் படுத்தி, அவற்றிற்கான சங்கத்தை முறையாகப் பெற்று அரசச் செல்வத்தையும் பெருக்கிளுன்.

புதிய தலைநகரைப் பிறநாட்டு மக்களும் கண்டு வியக் கும்வண்ணம் அமைத்த கரிகாலன், பழைய தலைநகரின் இன்றியமையாமையினே மறக்தவ னல்லன் ; காவிரிப்பூம் பட்டினம், கடல்வாணிபத்திற்கு ஏற்றது என்பதும், உறையூர் உள்நாட்ப்ே பாதுகாப்பிற்கு ஏற்றது என்பதும் உணர்க்க, உறையூர்க்கண் இருந்த அரசன் கோயில் முதலாம் பல்வேறு மாளிகைகளைப் புதிய முறையில் மாற்றி அழைத்ததோடு, அந் நகரைச் சூழ்ப் பெரிய மதில் ஒன்றை எடுத்து, அம்மதில் முழுதும் பகைவர் கண்டு அஞ்சத்தக்க படைக்கலம் பல அமைத்துத் தலைநகரை அணுகுதற்கு அரிய அரண் அமைந்ததாக ஆக்கினன். (பட்டினப்பாலே உஅடு-கக).

பிறந்த நாள்தொட்டு, எல்லேயும், இாவும், நாடு, காடாட்சி என்ற எண்ணமேகொண்டு வாழ்ந்த கரிகாலன்,