பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சோழர்

'புறவின் அல்லல் அன்றியும் பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன்.”

(புறம் : உன, க.க., சகட, சசு)

இவ்வரலாறு உரைத்த புலவர் மூவருள் ஒருவரும் அவன் பெயர் யாது என்பதை அறிவித்தாரல்லர் ; அவன் வரலாற்றைத் தாம் பாடிய சிலப்பதிகாரத்தே பல இடங் களில் எடுத்துக்கூறிப் பாராட்டும் இளங்கோவடிகளும், அவன் பெயர் இஃது என்பதை ஒரிடத்திலேனும் உரைத் தாாலலா.

' எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் தீர்த்தோன்.” புறவு நிறை புக்கோன்.” 'குறுநடைப் புறவின் நெடுந்துயர் ாே எறிதரு பருந்தின் இடும்பை நீங்க அரிந்து உடம்பு இட்டோன்.” 'புறவுநிறை புக்குப் பொன்னுலகம் ஏத்தக்

குறைவில் உடம்பரிந்த கொற்றவன்.”

(சிலம்பு : உ0: இக-உ ; உக. இஅ ; உஎ . கசுசு-சுஅ : உஅ : க.எ, அம்மானை) * அன்பிலார் எல்லாம் தமக்குரியர் : அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்ற குறள் உரைக்கண், “ என்பும் உரியராதல் தன்ன கம்புக்க குறு நடைப் புறவின் தபுதியஞ்சிச் சீரைபுக்கோன் முதலாயினர்கண் காண்க' எனக் கூறும் பரிமேலழகரும் அவன் பெயரை அறிக்கவ. 历°@鑫F,

சோழர் வரலாறு உரைக்கும் நூல்களாய கலிங்கத்துப் பாணி, இராசராசசோழன் உலா, குலோத்துங்கசோழன் உலா, விக்கிரமசோழனுலா முதலாய நால்களும் அவன் பெயரை அறிவித்தில; ஆயினும், அவ்வாறு தலைபுக்க பெரி யோன், சிபி என்னும் பெயருடைப் பெரியோனுவன் என, நாட்டு மக்கள் நவில்கின்றனர்.