பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சேரர்

மீது தன் அரச இலாஞ்சனேயாகிய வில்லைப் பொறித்து மீண்டான். சேரலாதனின் இவ்வெற்றிச் சிறப்பு, அவன் பெயரோடு இணைத்தும் பாராட்டப் பெற்றுளது.

அமைவால் அருவி இமையம் விற்பொறித்து

இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன்கோல் கிறீஇத் தகைசால் சிறப்பொடு பேரிசை மாபின் ஆரியர் வணக்கி.”

(பதிற்றுப் பத்து, பதிகம். உ} "இமயத்து -

முன்னேர் மருள வணங்குவில் பொறித்து.”

(அகம்: க.உ.எ)

"ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத்

தொன்று முதிர் வடவரை வணங்குவிற் பொறித்து வெஞ்சின வேந்தாைப் பிணித்தோன். (அகம்: கூகசு)

'குமரியொடு வடஇமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட

சேரலாதன்?

(சிலம்பு, வாழ்த் து: உாைப் பாட்டு)

இமயத்தே விற்பொறித்த விறல் மிக்கோனுய நெடுஞ் சேரலாதன், ஆண்டுத் தனக்குப் பணியாது கின்ற யவன அரசர்களைப் போரில் வென்று கைப்பற்றி, அக்கால வழக் கப்படி, அவர் தலையில் நெய்யைப் பெய்தும், அவர் கைக ளைப் பின்கட்டாகக் கட்டியும் இழிவுசெய்ததோடு, அவரி டத்தினின்றும், விலைமதிக்கொணு அணிகளையும், வயிாங் களையும் தண்டமாக வாரிக்கொணர்ந்து, அவற்றைத் தன் நாட்டுப் பேரூர்களில் வாழும் பாணர், கூத்தர் முதலாம் பரிசில் மாக்கட்கு வழங்கிச் சிறப்புற்ருன்.

பேரிசை மரபின் ஆரியர் வணக்கி,

நெய்தலைப் பெய்து, கைபிற்கொளிஇ, அருவிலே நன்கலம் வயிரமொடு கொண்டு பெருவிறன் மூதார்த் தந்து பிறர்க்குதவி.'

(பதிற்றுப் பத்து, பதிகம் : உ)