பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பாண்டியர்

அாவும், குரும், இரைதேர் முதலையும் உருமும் சார்ந்த வர்க்கு உறுகண் செய்யா செங்கோல் தென்னவர் காக்கும் நாடு.”

(சிலம்பு, கங்: டு-க)

மாநிலம் போற்றும் மாண் புடைத்தாம் பாண்டியர் தலைநகராம் மதுரை, சங்க இலக்கியங்களுள், கூடல் என்ற பெயரிேைலயே பெரிதும் வழங்கப்பெறும் ; மதுரை நோக்கிச் செல்வார், அம் மதுறையைக் காணலாகாச் சேய் மைக்கண் செல்லும்போதே, மதுறை அணித்தாயிற்று என்பதை அறிவர். அகில், குங்குமம், காவி, சந்தனம், கத்துரி முதலாம் மணங்களை வாரிக்கொண்டும், கழுநீர், சண்பகம், குருக்கத்தி, மல்லிகை, முல்லை முதலாம் மலர் களின் மணத்தில் சிளைத்தும், அடுக்களைகளில் எழும் தாளிப்புப் புகை, அங்காடிகளில் அப்பம் சுடுவாரிடத்தே எழும் அப்பப்புகை, மகளிரும், மைந்தரும், தம் துகிலிரம் போக எழுப்பும் அகிற்புகை, வேள்விச் சாலைதொறும் எழும் ஆகுதிப் புகையாய இவற்றையும் உடன்கொண்டு பல்வேறு மணங்கமழ வரும் தென்றலை அறிந்தவுடனே, மதுரை அணித்தாயிற்று என்பதை யாவரும் அறிவர்":

'காழகிற் சாக்கம், கமழ்பூங் குங்குமம், காவிக் குழம்பு, நலங்கொள் தேய்வை, மான்மதச் சாந்தம், மணங்கமழ் தெய்வத் தேமென் கொழுஞ் சேருடி, ஆங்குத் தாதுசேர் கழுநீர், சண்பகக் கோதையொடு மாதவி மல்லிகை, மனைவளர் முல்லைப் போதுவிரி தொடையல் பூவனே பொருந்தி, அட்டிற் புகையும், அகலங் காடி முட்டாக் கூவியர் மோதகப் புகையும், மைந்தரும், மகளிரும் மாடத் தெடுத்த அத்திம் புகையும், ஆகுதிப் புகையும் பல்வேறு பூம்புகை அளை இ

மதுரைத் தென்றல் வந்தது காணிர்,

கனி சேய்த் தன்று அவன் கிருமலி மூதார்.”

(சிலம்பு, கங்: க.கடு-கடங்}