பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 7.

மதுரையில், கடவுளர்க் கமைந்த கோயில்கள், அரசன் உறையும் அரண்மன் ஆகிய இவ் விடங்களில், எழும் முர சொலியும், அவ்வூர் வாழ் அந்தணர் ஒதும் அருமறை யொலியும், மாதவர் ஒதும் மறையொலியும், வேந்தன் அளித்த விருதுகள் பெற்ற வீரர் தம் வெற்றிப் பேரொலி யும், போரில் கொண்டனவும், காட்டில் கைக்கொண்டன வும் ஆய களிறுகளின் பிளிருெலியும், பக்திகளில் கிற்கும் பரிகளின் முழக்கொலியும், பொருநர் கொட்டும் கிணே பொலியும் ஒன்று கூடிக் கடல் ஒலித்தாற்போன்று பேரொலி செய்து, வருவாரைச் சேய்மைக்கண்ணேமே

வரவேற்று கிற்கும் :

“அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும்,

பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும், பால்கெழு சிறப்பின் பல்லியம் சிறந்த, காலை முரசக் கனைகுரல் ஒதையும், நான்மறை அச்கனர் கவின்ற ஒதையும், மாதவர் ஒதி மலிந்த ஒதையும், மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு வாளோர் எடுத்த நாளணி முழவமும் போரிற் கொண்ட பொருகரி முழக்கமும், வாரிக் கொண்ட வயக்கரி முழக்கமும், பணைநிலைப்புரவி ஆலும் ஒதையும், கிணைகிலேப் பொருநர் வைகறைப் பாணியும் கார்க்கடல் ஒலியிற் கலிகெழு கூடல் ஆர்ப்பொலி எதிர்கொள.'

(சிலம்பு, கங் : க.க.எ-டு)

மதுரை, ஒரு பேரரசின் தலைநகராம் பெருமை யுடைத்து ஆதலின், அங்கர்க்குப் பகைவரான் அழி வுண்டாதலும் கூடும்; அவ்வாறு அஃது அழிவுருவண்ணம், அதைக் காக்கவல்ல அரண், மதுரையைச் சூழ அமையப் பெற்றிருந்தது ; காவற் காட்டையும், அகழியையும், மதிலையும் அமைத்து அரண்செய்த அவர்கள், காவற்காட் டையும், அகழியையும் கடத்துவக்க பகைவர், மதிலக்