பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 பாண்டியர்

கடக்கலாகாவாறு, அரிய பொறிகள் பலவற்றை அம் மதிற் கண் அமைத்து வைத்தனர்; வளைந்து தான்ே எய்யும் வில், கருவிமல் குரங்குபோலும் பொறி, கல்லுமிழ் கவண், காய்ந்து இறைத்துச் சேர்ந்தாரை வருத்தும் நெய், செம்புருக்குமிடா, இரும்புருக்கும் உலைகள், கல்லிட்டு வைக்கும் கூடை, மதிலைப் பற்றுவாரைக் கோத்து வலிக் கும் துண்டில், கழுத்தில் பூட்டி மு. க்கும் சங்கிலி, உச்சி யைக் கொத்தி மூளையைக் கடிக்கும் ஆண்டலைப் புட்பொறி, அடித்துத் தள்ளும் இருப்புக் கவை, கழுக்கோல், அம்புக் கட்டு, எவறைகள், ஐயவித்துலாம், மதிலேப் பற்றுவார் கையைப் பொதுக்கும் ஊசி, பகைவர் கண்ணே க் கொத்தும் சிச்சிலிப் பறவைபோலும் பொறி, பகைவர் உடலைக் கோட் டால் கிழிக்கும் பன்றிப் பொறி, பண போலும் பொறி, வாயிற் கதவுக்கு வலியாக உள்ளே விட்டுவைக்கும் எழுவும் சீப்பும், கணையமாம், கோல், குந்தம், வேல், இவைபோல் வன பிறவெல்லாம், அம் மதிலகத்தே அமைக்கப்பெற் அள அரும் பொறிகளாம்:

'மிளையும், கிடங்கும், வளைவிற் பொறியும், கருவிரல் ஊகமும், கல்லுமிழ் கவனும், பரிவுறு வெந்தெயும், பாகம் குழிசியும், காய்பொன் உ?லயும், கல்லிடு கூடையும் தாண்டிலும், தொடக்கும், ஆண்டலே அடுப்பும், கவையும், கழுவும், புதையும், புழையும் ஐயவித் துலாமும், கைபெயர் ஊசியும் சென்றெறி சிாலும், பன்றியும், பணையும் எழுவும், சீப்பும், முழுவிறற் கணையமும், கோலும், குந்தமும், வேலும் பிறவும் ஞாயிலும் சிறந்து காட்கொடி நுடங்கும் வாயில்.” (சிலம்பு, கடு : உ0எ-க அ) பகைவர் படைகொண்டு வருதற்குமுன்னர், அதற் காம் இடமும், காலமும், ஏற்ற வலியும் ஆராய்தற் பொருட்டு ஒற்றர் பலரை ஊாகத்தே அனுப்புதல் செய்வர்; ஆதலின், அத்தகையார் எவரும் உட்புகாவண்