பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. கருங்கை ஒள்வாள் பெரும்பெயர்வழுதி

பாண்டிய நாடாண்ட பேரரசருள், பெருவழுதி என்ற பெயருடையார் பலராவர்; ஆனால், பெருமபெயர் வழுதி என்ற பெயருடையான் இவன் ஒருவனே. பெரும்ப்ெயர் என்ற தொடர், மிக்க புகழ் எனும் பொருளுடையதாம் : * பெரும்பெயர்ச் சாத்சன், பெரும் பெயர் முதி' (புறம்:கனஅ.க.சு.அ) என் ற தொடர்களைக் காண்க. இத்தல், இவ் வழுதி, வழுதியர் குலத்து வந்தாருள் எல்லாம், திறை புகழ் உடையாளுதல் வேண்டும் என்பது தெளிவாகும். இவன் பெயர்க்கு முன்வந்து வழங்கும் சுருங்கை ஒள்விiள் என்ற தொடருள், கருங்கை என்பது, வாள் பிடித்துக் காழ்ப்பேறிய வலிய கை எனப் பொருள்படும். ஆகவே, இவன் வாட்போர் வல்ல விாணுதலும் விளங்கித் தோன் றும்; அதற்கேற்ப, இவ்வழுதி, பொன்னன் இயன்றிமுக படாத்தினையும், புள்ளிகள் பொருந்தி அணிபெறத் தேர்ன் அறும் மத்தகத்தினையும், அணுகுகற்கரிய ஆற்றலையும், மணம் நாறும் மத நீரையும், கயிற்ருற் கட்டுண்டு தொங்கும் மணி ஒலிக்கும் இரு பக்கங்களையும், பெரிய கையையும் உடைய யானேயின் பெரிய கழுத்திடத்தே அமர்ந்து, யானே, கொலைத்தொழில் வல்ல கூற்றுவனே போல், காலால் அடு தலும், கையால் ஊக்குதலுமன்றித் தன் கூரிய கோடே படையாகப் பகைவர்தம் கோட்டைக்கதவைக் குத்திப் பாழ் செய்யும் கொலைத் தொழில் கண்டும் நிலைகலங்கா நெஞ்சுரன்

உடையான் எனப் பாராட்டப் பெறுதலும் காண்க.

கொற்றத்தால் சிறந்த இக் கோவேர்தன், கொடை யாலும் சிறந்தோளுவன், கன்னேப் பாடி வருவார், வேண்டு வனவற்றை விளங்க உரைக்கா முன்னரே, அவர் முகத்தை நோக்கும் அவ்வளவிலேயே, அவர் அகத்துள வேட்கையை அறிந்தணர்ந்து, அவர் விரும்புவ அளித்த அனுப்பும், அறிவும் அருளும் ஒருங்கே உடையனவன். இவன் பால் பாருள்பெற வேண்டும் என்ற ஆசைப்பெருக்கால், பாணர், கூத்தர், பொருநர், புலவர் முதல்ாம் இரவலர்,