பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4t பாண்டியர்

வான்தோய் வன்ன புரிசை, விசும்பின் மீன்யூக் தன்ன உருவ ஞாயில், கதிர் நுழை கல்லா மாம்பயில் கடிமிளை, அருங்குறும்பு உடுத்த கானப் பேரெயில், கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய இரும்புஉண் நீரினும் மீட்டற்கு அரிது என வேங்கை மார்பன் இரங்க வைகலும் ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர் பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே ! இகழுகர் இசையொ டு மாயப், புகழொடு விளங்கிப் பூக்கரின் வேலே ' (புறம்: உக)

கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி, தமிழ் மொழிக்குச் செய்த கொண்டு தனிச்சிறப்புடையது : தமிழ்ச்சங்கங்கள் மூன்றனுள், கடைச்சங்கத்தைப் புரந்த பாண்டிய அரசர்களுள் உக்கிரப் பெருவழுசியும் ஒருவ வைன் ; கடைச்சங்கத்தின் இறுதிக்காலத்தே வாழ்ந்த இவன், அச் சங்கம் கலந்துவிடுமோ என்ற அச்சம் உடைய ணுயினன்; அதனல், அச் சங்கப் புலவர்களின் பாக்களே ஆராய்ந்து, அவற்றுள் அகத்திணை தழுவிய பாடல்களேத் தேர்ந்து, அவற்றுள்ளும், பதின்மூன்றடிச் சிறுமையும், முப்பத்தோரடிப் பெருமையும் கொண்ட நானுாறு பாக்களே எடுத்து, அகநானூறு அல்லது நெடுந்தொகை என்ற பெய ாால் தொகுத்து அளிகதான்் : இவ் அரிய தொண்டில், இவனுக்கு உற்ற துணையாய் உதவிபுரிந்தவர், மதுரை உப் பூரிகுடி கிழார் மகளுர், உருகதிர சன்மனுர் எனும் ஊமைப் புலவராவர். கிருக்குறள் அரங்கேறிய அவைக்குத் தலைமை வகித்த தனிப்பெருமையையும் இவனுக்கே அளிப்பாரும்

உளர். -

ஆற்றற் பெருமையால், அருந்தமிழ்த் தொண்டின் சிறப்பால் ஆன்ருேர் போற்ற வாழ்ந்த உக்கிரப்பெரு வழுதிபால், அக்காலத் தமிழரசர்கள பால் காண இயலா நற்பண்பொன்றும் இருக்கக் காண்கிருேம் ; உலகம் போற் அம் உயர்கிலேபெற்றத் திகழ்ந்த க்மிழகம், இன்று