பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பாண்டியர்

போகும் காலத்தும் அறம்பிழைக்கும் அறிவிலியாகான், மறன் இழுக்கா மானம் உடையவன் முதுகுடுமி ; ئے{{ |t( நெறி பிழையா மறம் உடையவன் முதுகுடுமிப்பெருவழுதி.

போர் நிகழ் இடம் இது; அது நிகழா இடம் இது என்ற இடவரையறையோ, என்று, எப்போது போர் தொடங்கப் பெறும் என்ற காலவரையறையோ, போர் தொடங்குவார் யாவர் யாவர் மீது போர் என்ற மக்கள் வரையறையோ இல்லாமல், காம் விரும்பிய இடங்களிலெல் லாம், தாம் விரும்பிய போதெல்லாம் குண்டுகளை மழை யெனப் பொழிந்து, போர்வீரர்களையேயன்றி, போர்க் களத்தைப் பார்த்தும் அறியாப் பசசிளங் குழந்தைகள், பாவையர், தளர்நடைப் பெரியோர் ஆகியோரையும், வாயில்லா உயிர்களாம் அஃறிணைப் பொருள்களையும் ஒருங்கே கொன்று குவிக்கும் கொடுமை நிறைந்ததன்று பழங்காலப் போர். பண்டைத் தமிழரசர்கள், தாம் எந்த நாட்டின் மீது போர்தொடுக்கப் போகின்றனரோ, அந் நாட்டு மக்கட்குப், போர்தொடுக்கப் போகும் நாள் இது; அதற்குள் போர்க்களம் போதற்கியலா அனைவரும் போக் கிடம் தேடிப் போய் விடுங்கள்; என முன் கூட்டியே அறிவிப்பர்; போரில் அழித்தலாகா உயிர்களாக, ஆக்களே யும், அவ் ஆக்களின் இயல்பினராய அந்தணரையும், பெண் களையும், பிணியுற்ருாையும், ஆண்மக்கட்பேறு வாய்க்கப் பெருதார், களம் புகுத்த அழித்துவிடின், அவர் குடிவழி அற்றுப்போம் ஆதலின், அவ்வாறு ஆண் மக்கட் பேறில்லா ஆடவர்களையும் கருதினர் அக்கால அரசர்கள். இவர்களுள், ஆக்கள் ஒழிந்த எனயோர், அரசர் அறிவிப்பன அறிந்து அகன்று வாழ்வர்; ஆக்கள், அவ்வாறு அகன்று வாழும் அறிவுடையன ஆகா என அறிந்து, அவற்றைத் தம் வீரரை விட்டு வளைத்தக் கொணர்ந்து காப்பமைந்த இடத்தே இருத்திக் காப்பர். அக்கால அரசர்களிடையே காணப் பட்ட இப்போர்ப் பண்பு, முதுகுடுமிப் பெருவழுதி பாலும் பொருக்கி யிருந்தது என்பதை, அவனைப் பாராட்டிய

நெட்டிமையார் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்: