பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உo. மதிவாணன்

பாண்டியன் முடத்திரு மாறனல் தோற்றுவிக்கப் பெற்ற, அவன் முதலாக, உக்கிாப்பெருவழுதி ஈருக உள்ள பாண்டிய அரசர் நாற்பத்தொன்பதின்மரால் புரக் கப் பெற்ற கடைச்சங்கத்தைப் புரந்த அவ்வரசர்களுள் ஒருவனுவன் மதிவாணன்; மதிவாணன், அச் சங்கத்துக் கவியரங்கேறிய பாண்டியர் மூவருள் ஒருவனும், ஒப்புயர் வற்ற உறுபுகழும் உடையனவன் ; மதிவாணன், மன்னணுய் மாகிலம் ஆண்ட புகழினும், முத்தமிழுள் ஒன்றாம் நாடகத் தமிழ் வளரத் துணைபுரிந்த இறவாப் புகழே பெரிகாம் ஆகவே, அவனைப் புலவனுகவே அறிதல் நம் கடனுயிற்று; மதிவாணன் இயற்றிய நூல் நாடகத் தமிழின் நலங் குறித்து வந்தது; மதிவாணன் நாடகத் தமிழ் நூல் என்றே அர் நூல் பெயர் பெறும்; சூத்திரப் பாவாலும், வெண்பாவா வாலும் இயற்றப்பெற்ற அந்தால், முதல்நூலில் உள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்தின் இலக் கணம் உணர்த்தும் சிறப்புடைத்து என்ப. இந் நாளில், அக்னல் முழுதும் கிடைக்கப் பெற்றிலது; சிலப்பதிகார உரையில், அடியார்க்கு நல்லார் எடுத்தாளும் சிற்சில குத்தி ாங்களே மட்டுமே சாம் அறிதல்கூடும். அடியார்க்கு கல்லார், சிலப்பதிகாரத்திற்குத் தாம் எழுதும் உரைக்கு மேற்கோ ளாகக் கொண்ட இசை நுணுக்கம், இந்திர காளியம், பஞ்ச மாபு, பரத சேனுபதீயம், மதிவாணர் நாடகக் தமிழ் நூல் என்ற ஐந்து இசைநூல்களுள் இதுவும் ஒன்று : மதி வாண ஞர் பற்றி நாம் அறியத் தக்கன இத் துனேயவே; இவன், முடத்திரு மாறனுக்கும், உக்கிரப்பெருவழுதிக்கும் இடைப் பட்ட காலத்தே இருத்தவதைல் வேண்டும்:

' கடைச் சங்கம் இரீஇய பாண்டியருள், கவியரங் கேறிய பாண்டியன் மதிவாணனர் செய்த, முதல் நால்களில் உள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்தி யன்ற மதிவாணர் நாடகத்தமிழ் நூலும் என இவ்வைக் தும், இந் நாடகக் காப்பியக் கருத்தறிந்த அால்களன்றே னும், ஒரு புடை யொப்புமை கொண்டு முடித்தலைக் கரு திற்று இவ்வுரை எனக் கொள்க.” (சிலம்பு, உாைச்சிறப்புப் பாயிரம் : அடியார்க்கு கல்லார் உரை.)