பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சேரர்

போர்க்களம் புக்குப் போரிட்டு, வாள்வப்ெ பெற்ற வர்க்கே துறக்கத்தில் இடமுண்டு என்ப; இறந்து பிறந்த குழந்தையும், உருவின்றிப் பிறந்த ஊன்தடியும், அத்தகு வாள் வடுப்பெறும் வாய்ப்பினேப் பெறுவதில; ஆதலின் அவை துறக்கம் புகா ; ஆனால், அவற்றையும் துறக்கம் புகுத்தும் கல் உள்ளத்தவராய் நாடாள்வார், அவற்றைத் கருப்பைப் புல்மீது கிடக்தி, வெற்றிவீரர் சென்றவழியே இவையும் செல்க, என, வாழ்த்தி வாளால் வெட்டிப் புதைப்பர் ; இஃது அரசர்கள் பண்பு. அத்தகைய அரசர் கள் மரபிலே வந்த யான், சங்கிலியால் பிணிக்கப்பெற்று, இழுத்துச் செல்லப்படும் நாய்களேபோல், பகைவரான் தளைசெய்யப் பெற்று, அவர் அடைக்க சிறையகத்தே வாழ்கின்றனனே அங்கோ ! என்னே என்கிலே அவர்கள் அளிக்கும் உணவினே உண்ணேன் என்ற உறுதிப்பாடு அற்று வயிற்றுப் பசித்தீயை அடக்குவதற்காக, அவரே தாராத நிலையில், நானே இரக்க வேண்டி, அவர் இகழ்ந்து அளித்த நீரை உண்னும் இழிநிலையுடைய கீழ் மகனே யான் ? என்னைப்போலும் கீழ்மகன் எவனும், இவ்வுலகின் என்றும் பிறவான்,” என்றெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கிற்று அவன் உள்ளம்; எண்ணிய தன் எண்ணத்தை ஒர் ஏட்டில் எழுத்துருவாக்கி அண்மையில் இருத்தி உறங்கி விட்டான் :

' குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்

ஆளன்று’ என்று வாளின் தப்பார் :

தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய

கேளி ல் கேளிர் வேளாண் சிறுபதம்

மதுகை இன்றி வயிற்றுத் தீக் தணியத்

தாம் இாந்து உண்னும் அளவை

ஈன்மரோ இவ்வுலகத் தான்ே.” (புறம் : எச)

சேரமான் கணக்கா விரும்பொறையின் அவைக் களத்தே இருந்து அவன் வெற்றிச் சிறப்பினையும், மற னிழுக்கா மானம் கிறைந்த அவன் பண்பாட்டுப் பெருமை யினையும் பாடி மகிழும் புலவராய பொய்கையார், தம் அரச