பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ. கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சோல் இரும் பொறை, சோருள் இரும்பொறை என்ற மரபில் வக்கோ வைன் ; கர்ே எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்பாலும் ஒருவன் இருத்தலின், அவனின் வேறு அறி தற்கு, இவன், கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ் சோல் இரும்பொறை எனப்பட்டான் ; இரும்பொறை மரபினர், கொண்டி, மாங்தைபோன்ற ஊர்களால் சிறப் புற்ற கடற்கரை நாட்டினே ஆண்டிருந்தவராவர்; அவர் வழிவந்த இவன், தனக்குரிய நாட்டோடு அமையானுய்க் கொங்குகாட்டில் உள்ளதும், சோருள் மற்றொரு கிளையி னர்க்கு உரியதுமாய கருவூரையும் கைப்பற்றி, அக் நகர்க் கண்ணே அரசுசுட்டில் ஏறி, முடி சூடிக்கொண்ட சிறப் புடையோனுவன் ; வாட்போரில் வல்லவன் ; பெருஞ் சேரல் எனப் பெருமை செய்யப்பெற்ருேன்.

“நல்லாரைக் காண்பதுவும் நன்றே" என்ப; தம்மைக் காண்பார்தம் தீமை போக்கி தன்மை பெருகச்செய்யும் ஆற்றல் கல்லார்க்கு உண்டு ; கருவூர் எறிய ஒள்வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறைபால் அத்தகைய நற் பண்பு அமைந்து கிடந்தது ; தன்னேக் காண் பார்பால் அமைந்துகிடக்கும் வெறுக்கத்தக்க பண்புகளேயே யல்லா மல், அவர்தம் வெறுக்கத்தக்க உடலமைப்புக்களையும் மாற்றவல்ல தோற்றப் பொலிவுடையான் பெருஞ்சேரல் இரும்பொறை; அவன் காலத்தே நரிவெரூஉத் தலையார் என்ற புலவர் பெருந்தகையார் ஒருவர் இருந்தார்; அவர் உடல் நலமும், தோற்றமும் பாது காரணத்தாலோ வேறு பட்டுத் தோன்றின; அவ்வாறு வேறுபட்ட அவர் தோற் றம், எவ்வுருவைக் கண்டும் அச்சம்கொள்ள இயல்பின தாய நரிக்கும் அச்சம் தரும் அத்துணைக் கொடிதாய் அமைந்திருந்தது; பெருஞ்சேரல் இரும்பொறையின் காட்சி நலச் சிறப்பினேயும், நரிவெரூஉத் தலையாரின் உடல்