பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஅ. வெளிமான் குமணன் கோலோச்சியிருந்த காலத்தே, அவனே டொத்த வள்ளலாய் வாழ்ந்திருந்தான் வெளிமான்; வெளி மான், வருவார்க்கு வரையாது வழங்கும் வள்ளலாய் வாழ்க் திருந்தவன். தன் உடல் தளர்ந்து உயிரிழக்கப் போகும் அங்கிலையிலும், தன்னை உள்ளி வருவார்க்குத் தன்பால் உள்ளனவற்றை உவந்தீயும் உயர்வுள்ளம் உடையவன் வெளிமான். வெளிமானுக்கு ஒர் இளவல் இருந்தான் ; இளவெளிமான் என அழைக்கப்பெறும் அவன், வெளி மானைப்போல் அத்துணைச் சிறந்தவனல்லன், கோடையால் வெம்மையுற்று வருந்திவருவார்க்குக் கொழு நிழலால் குளிர்வூட்டும் பெருமரம்போல், வறுமைத் துயர் வாட்ட வருந்திவருவார்க்கு வாரிவழங்குவன் வெளிமான் என்பதறிந்து அவனைப் பாடிப் பரிசில் பெற வந்திருந்தார் புலவர் பெருஞ்சித்திானர்; வந்த புலவர் வெளிமானேக் கண்டார்; அக்காலை வெளிமான் உடல்நலம் கெட்டு, உயிர் போகுநிலை எய்திவிட்டான்; அந்நிலையிலும், புலவரை அருகழைத்து, அவர் பாடக்கேட்டு இன்புற்ருன் ; தம்பியை அழைத்து, புலவர்க்கு, அவர் வேண்டும் பொரு ளெலாம் அளித்து அனுப்புக எனப் பணித்தான்; ஆனல், அந்தோ அவன் அப்பொருள் அளிக்க, அதைப் பெற்ற புலவர் மகிழ்ந்து கிற்கும் அவர் முகம்நோக்கி மகிழும் அவ்வின்பநிலையை இழிந்துவிட்டான் இறந்துவிட்டான் வெளிமான்; ஆக்கிவைத்த பானையின்றும் சோறின்றி எரி புறப்பட்டாற் போலாயிற்று புலவர்க்கு, கடலிடையே செல்லும் கலமொன்று, மாரிக்காலத்து நள்ளிரவில் கவிழ்ந்துவிட்டதாக, அக் கப்பலில் இருந்த, காணவும், பேசவும் மாட்டாக் கண்ணற்ற ஊமை யொருவன், கடலில் வீழ்ந்து கலங்குவது போல் கலங்கினர்; அவ்வாறு வருக்கி