பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 திரையன் நன்னனுக்குரிய பாழிநகர், வேளிர், தம் கிரண்ட பொருள் களேயெல்லாம் சேர்த்து வைக்கும் சிறப்புடைத்தாதல் அறிந்த அக்கால அரசர் பலரும், அப் பாழி நகரைத் தம தாக்கிக் கொள்ளும் விருப்புடையாயினர்; அவ்வாசை, வடுகரையும் விட்டதன்று; அதனல், வடுகர் அப் பாழி யைப் பற்றி ஆண்டு வந்தனர் சிலநாள்; ஆனால், அப் பாழி யைப் பற்றி ஆள்வதைத் தம் குடிக்கடகைக் கருதி வந்த னர் சோழர்; ஆனல், அக்கடன், இளம்பெருஞ் சென்னி யின் காலம் வரை குறைவினையாகவே இருந்தது; அது காணப்பொருத அவ்விளம் பெருஞ் சென்னி, அப்பாழியை எவ்வாற்ருனும் கைப்பற்றிக் கொள்ளும் கருத்துடைய குயின்ை ; உடனே பெரும்படை கொண்டு பாழிநகரைத் தாக்கினன்; செம்பினை ஒத்த, பாழியின் அாணகத்து மதில் அழிந்தது; அக்காலே, அப் பாழி நகரை ஆண்டிருந்த வடு கரை, அவன் யானேப்படை அழித்தது ; பாழியைப் பறி கொடுத்தனர் வடுகர்; இவ்வாறு அழிந்தது வடுகர் தம் தமிழக வாழ்வு. இளம் பெருஞ் சென்னி, குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார் செம்புறழ் புரிசைப் பாழி நூறி - வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக் . - கொன்ற யானைக் கோடு. (அகம்: க.எடு)