பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிட்டங்கொற்றன் 63 தருவன்; நாள்தோறும் செல்வதாயினும், உமக்கு முன் னரே தந்துளேன் என மறுக்காது, யாம் வேண்டுவ எல் லாம், வேண்டியாங்கே தருவன். அவன் தொழுவத்தில் உள்ள பசுக்கள் அனைத்தையும் கேட்பினும் கொடுப்பன் ; களத்தின்கண் கிடக்கும் நெற்போர்க் குவியலையே கேட் பினும் கொடுப்பன் ; எமக்கேயல்லால், தன் மலைநோக்கி வந்து வாழ்த்திவிற்பார் அனைவர்க்குமே தருவன் ’ என அவன்பால் பொருள்பெற்ற பரிசிலன் கூறும் பொன்னு ாையால், அவன் கொடைவளம் இன்ன தன்மைத்து எனல் இனிது விளங்கும். “ இன்று செலினும் தருமே ; சிறுவரை நின்று செலிலும் தருமே ; பின்னும் முன்னே தந்தனென் என்னுது, துன்னி வைகலும் செலினும் பொய்யல னகி, யாம் வேண்டியாங்கு எம் வறுங்கலம் நிறைப்போன் ; இனமலி கதச்சேக் களளுெடு வேண்டினும் களமலி நெல்லின் குப்பை வேண்டினும், அருங்கலம், களிற்ருெடு வேண்டினும், பெருந்தகை, பிறர்க்கும் அன்ன அறத்தகை யன்னே? - (புறம் எக) பிட்டனுக்குரிய நாட்டு உழவர், தினேப்புனக்காவ அக்குத் துணையாக ஏற்றிய தீ, அவிந்து விடுமானல், அப் புனங்களில் மலிந்துகிடக்கும் மாணிக்கக் கற்கள், காம் விடும் ஒளியால் துணை செய்வதேபோல், பாணரையும், பொருநரையும் புரப்பதற்காகவே பிறந்த பிட்டங்கொற்றன், தன் கடமையில் ஒருவேளை தவறுவனுயின், தன் படைத் துணைவனும் பிட்ட்ங்கொற்றன் தளர்ச்சியினைப் போக்கு வது தன் கடனுகும் என்று எண்ணும் பண்பினயை அவன் அரசயை சோன், தானே முன்வந்து, பிட்டங்கொற்ற ல்ை புரக்கப்படவேண்டியவர்களைப் புரந்து நிற்பன். இவ் வாறு, வள்ளல் தன்மையில் வாட்டம் காட்டாப் பிட்டங் கொற்றனேயும், அவன் தளர்ந்தவழி, முன்வந்து துணை புரி