பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 திரையன் யும் சேரவேந்தனையும் பெற்றுள்ளமையால், இாவலர்கள் சிறிதும் கவலை கொள்ளாது உலையேற்றிச் சோருக்கியுண் பதும், கள்ளைக்குடிப்பதும், மலரும் மாலையும் சூடி மகிழ்வ தும், பிட்டங்கொற்றன் வாழ்க அவன் தலைவன் மாக் கோதை வாழ்க! அவர்கள் கொற்றம் வாழ்க! அவர்கள், இரவலர்க்குக் குறையாது கொடுத்தற்காம் பெரும்பொருளை இறையாகத் தரும் அன்னர்ப் பகை மன்னரும் பெருவளம் பெற்று வாழ்க! என வாழ்த்துவதுமே செய்து வாழ்வர் ; என்னே அவன் வள்ளன்மை ! ‘ எற்றுக உலேயே ஆக்குக சோறே! கள்ளும் குறைபடல் ஒம்புக! ஒள்ளிழைப் பாடுவல் விறவியர், கோதையும் புனைக ! அன்னவை பிறவும் செய்க என்னதாஉம் பரியல் வேண்டா; வருபதம் நாடி, ஐவனம் காவலர் பெய்தி நந்தின், ஒளி திகழ் கிருந்து மணி, நளியிருள் அகற்றும் வன்புல நாடன், வயமான் பிட்டன், - ஆாமர் கடக்கும் வேலும், அவன் இறை மாவள் ஈகைக் கோதையும், - மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே.” (புறம்: க.எஉ) பொன்மலையைச் சார்ந்த காகமும் பொன்னிறம் பெறும்' என்ப. பெருங்கொடை வள்ளலாய் வாழ்ந்த வன், பிட்டங்கொற்றன் மட்டும் அல்லன் ; அவன் நாட்டு வாழ் மக்கள் அத்தனைபேருமே பெருங்கொடை வள்ளல் களாய் வாழ்ந்தனர்; அவன் மலைநாட்டு மக்கள், மாையா வின் பால் ஊற்றி ஏற்றிய உலையில், தினேயரிசி யிட்டு, சந்தன விறகால் தீமூட்டி ஆக்கிய சோற்றை, வாழையிலை யில் வைத்து வருவார்க்கு வழங்கி உண்ணும் உயரிய வாழ்க் கையினே உடையர் என்பதைப் புலவர்கள் கூறிக் கூறிப் பாராட்டுவர். மரையான் கறந்த நுரைகொள் ம்ேபால்.