பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச. வல்லார்கிழான் பண்ணன் வல்லார் என்ருேர் ஊர் உண்டு; வன்புலம் குழி விளங் கிய அவ்வூர், கடத்தற்கரிய காவற்காட்டையும், போர்பல கண்டு புல்ால் நாமம் அம்பேந்திய வீரர் கின்ற காக்கும் அரிய அரண்களையும் உடையது; அவ்வூர் மன்றம், விளா மரங்கள் பல தழைத்துக் காய்த்துக் கனிந்து கிடப்பதால் மாண்புற்றது; முற்றிக் கனிந்து விழும் விளாங் கனிகளே, அவ்வூாகத்து மறவர்மக்களும், அவ்வூரை அடுத்துள்ள காட்டகத்துக் களிற்றின் கன்றுகளும் கலந்து எடுத் துண்ணும் கவின் உடையது; அவ்வூரை உரிமைகொண்டு வாழ்க்க உரவோன் பண்ணன் எனும் பெயருடையனவன்; வாட்போர் வல்லயை அவன், பகைவரை அழித்துப் பெறும் பொருளையெல்லாம் தன்னைப்பாடிவரும் பரிசிலர்க்கே அளிக்கும் அருள் உள்ளம் உடையனவன்; பண்ணன் வாழ் வல்லாரின் வனப்பும், அவன் வாட்போர் வன்மையும் விளங்கப் பாடிய சோணுட்டு முகையலூர்ச் சிறுகருங்தும் பியார் எனும் புலவர், "பாண வல்லார் எனும் ஊரின் கண்ணே பண்ணன் என்பானுெரு பெருவள்ளல் உளன்; வறுமையால் வருந்தும் கின்சுற்றம் உண்டு, உவந்து வாழ் தலை வேண்டுவையாயின், பண்ணன் பகைப்புலம் நோக்கிப் போகற்கு முன்னரே, பசிப்பகையாய பரிசிலைப் பெறுதற்கு இன்னே அவன்பாற் செல்வாயாக’ எனப்பாடி, அவன் வள்ளன்மையினையும் வாயாரப் பாராட்டியுள்ளார்: "மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில் கருங்கண் எயிற்றி காதல் மகனெடு கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும் பெருங்குறும் புடுத்த வன்புல இருக்கைப் புலாஅ அம்பின் போருங் கடிமிளே வலாஅ ரோனே வாய்வாள் பண்ணன்: உண்ணு வறுங்கடும்பு உய்தல் வேண்டின் இன்னே சென்மதி நீரே, சென்று அவன். புகைப்புலம் படாா அளவை நின் பசிப்புகைப் புரிசில் காட்டினை கொளற்சே." ۱ -n n ھ ء %، میر ، ، f