பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு. வாணன் பெருகிலக்கிழார்களாய்ப் புலவர் போற்ற வாழ்ந் தாருள் வாணனும் ஒருவன். வாணன், சிறுகுடி எனும் ஊரில் வாழ்ந்த வற்ருப் பெருஞ்செல்வ முடையான். சிறுகுடி எலும் பெயருடைய ஊர்கள் இரண்டுள. ஒன்று பண்ண லுக்குரியது; சோணுட்டில் காவிரியின் வடகரைக்கண் உள்ளது. வாணன் சிறுகுடி, பாண்டி நாட்டில் உள்ளது. வாணன் சிறுகுடியும், பண்ணன் சிறுகுடியேபோல் பெரு வளங் கொண்டது. வாணன் சிறுகுடி, நெய்தல் கிலத்தைச் சார்ந்த மருத கிலத்து ஊராகும். அவ்வூரில், பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரால் அமைந்த பெரிய நீர்நிலை ஒன்று உண்டு. அஃது, அவ்வூரைச் சூழவுள்ள நன்செய்களுக் காம் நீரைத் தேக்கிவைக்கும் கற்ப்ணிகுறித்து நாடாண்ட பாண்டியாால் எடுக்கப்பட்டது. அங்கீர்நிலை, மடையெடுத் துக் கொண்டக்கால், வாய்க்காலுள் வந்து புகும் வாளே மீன்கள், அவ்வாய்க்கால் வழியோடி, வயலுட்புகுத்து, ஆண்டு, கிலத்தை உழுது செல்லும் நெடிய எருதுகளின் காற்கீழ் ஒடி, உழவர், கோல்கொண்டு அடிக்கவும் அஞ் சாது திரிந்து, இறுதியில், உழுத படைச்சாலுள் கிடந்து புரளும் எனின், சிறுகுடி நீர்வளம் எத்துணைப்பெரிது என்பது புலனும் ஆண்டு, வெண்ணெல் அரிவார் எழுப் பும் தண்ணுமையொலி, தாமாைபூத்த தடங்களில் வாழும் பறவைகளை அச்சுறுத்தி ஒட்டும். தைந்நோன்பு மேற் கொண்ட மகளிர், அந்தோன்பின் இறுதி ர்ளன்று, தம் வண்டற் பாவைகளை, உண்னு நீர்த்துறைக்கண் போட் ப்ெ போந்து, குரவையாடி மகிழ்தற்கேற்ற கடற்கரைச் சோலைகளையும் கொண்டது அச்சிறுகுடி. இத்தகு வளம் கொண்ட ஊரை உடையான் வாணன் என்பதல்லால், இவன் வரலாருக வேறு தெரிந்திலது. கடுந்தேர்ச் செழியன், z - படைமான் பெருங்குளம் மடைநீர் விட்டெனக் கால் அணைந்து எதிரிய கணக்கோட்டு வாளை, i அள்ளலம் கழனி உள்வாயோடிப்,