பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

அதியன் விண்ணத்தனார்

பழந்தமிழரசர் போர்வெறி மிக்கவராவர்; அவர் போர்வெறியினால் பாழான பகைவர் தேயம் பலவாம்; அத்தகைய வெறிமிக்க வேந்தன் ஒருவன் இயல்பினைப், புலவர் பூதனார் தாம் பாடிய பாட்டொன்றில் விளக்கிக் கூறியுள்ளார்.

வளம் நிறைந்த மருதநிலம் சூழ்ந்த தன் நாட்டையும் கொடி நுடங்கும் கோட்டையையும் திறையாகத் தந்து பணிந்து நிற்கும் பகையரசன்பால், தான் கொண்ட சினம் தணியானாய், அவன் அளிப்பனவற்றை ஏற்றுக்கொள்ளாது அவன் படையையும், பாதியையும் பாழாக்குமாறு படைகளை மேலும் மேலும் செலுத்தும் வேந்தன் பாசறைக்கண் தன் படையோடு உளன் என அவர் கூறுவதறிக,

“தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆரெயில்
அருந்திறை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து
வினைவயிற் பெயர்க்கும் தானைப்
புனை தார் வேந்தன் பாசறை யேமே”

(அகம்: அச)

தன்மகள், தான் மணத்தற்கு விரும்பிய ஓர் ஆண்மகனுடன் அவனூர் நோக்கிச் சென்றுவிட்டாள் என அறிந்த தாய், தன் மகள் வாழ்ந்த செல்வ வாழ்க்கையினையும், இப்போது, அவனோடு சென்று, செல்லும் வழியில் உறும் சிறுமையினையும் எண்ணி எண்ணித் துயர் உறும் தாயன்பு விளங்கப் பாடிய பாட்டு பாராட்டற்குரியதாம்.

தேன் பெய்து இனிப்பேறிய பாலைக் கையில் ஏந்திக் கொண்டு அவள் பால் சென்று, அவள் தலைமயிரை அன்பொழுகக் கோதிவிட்டும், அவள் விரும்பும் இனிய நல்லுரை கூறியும், அப்பாலை உண்ணுமாறு வேண்ட, உண்ணேன் எனக்கூறி மறுத்துவிட்டு ஓடிய என் மகள், இத்தகைய இன்பவாழ்வில் வாழ்ந்த இவளைத் துன்பம் நிறைந்த சுரவழியில் வலித்துச் செல்வது சீரிதன்று என காண்ணும், அருள் உள்ளம் இல்லா அக் காளையோடு போய்